தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் விடுமுறை என்றாலே வார்த்தையால் சொல்ல முடியாத அளவுக்கு குஷிதான். அரசு விடுமுறை தவிர்த்து பல்வேறு மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதாவது சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள், கோவில் திருவிழாக்கள், கும்பாபிஷேகங்கள், மசூதி, தேவாலயங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை அளித்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
25
Bannari Amman Temple Festival
பண்ணாரி அம்மன் கோவில் திருவிழா
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்து உள்ள வனப்பகுதியில் புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். அதுமட்டுமல்லாமல் குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அதிகாலை 4 மணி முதல் மாலை வரை தொடர்ந்து 12 மணி நேரம் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவர்.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா நடத்த கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா ஏப்ரல் 8ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய பண்ணாரிஅம்மன் கோவிலில் குண்டம் இறங்குவதற்காக, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து பக்தர்கள் ஈரோடு வருவது வழக்கம். ஆகையால் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அன்றைய தினம், பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது. இந்த விடுமுறை ஈடுசெய்யும் விதமாக ஏப்ரல் 26ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட நாள்களில் பொதுத்தேர்வு நடைபெறும் பட்சத்தில் அந்த வகுப்புகளுக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தாது. அதேபோல, மேற்படி உள்ளுர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instrument Act-1881)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது என மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.