ஏப்ரல் 7ம் தேதி நடைபெற இருந்த ஆண்டுத்தேர்வு ஒத்திவைப்பு! அரசு நிர்வாகம் அறிவிப்பு
ஆழி தேரோட்டம் காரணமாக வருகின்ற 7ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம் நடைபெறுவதாக இருந்த ஆண்டுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆழி தேரோட்டம் காரணமாக வருகின்ற 7ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம் நடைபெறுவதாக இருந்த ஆண்டுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வானது கடந்த மார்ச் 28ம் தேதி தொடங்கி வருகின்ற 15ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வை 4 ஆயிரத்து 113 மையங்களில் 9 லட்சத்து 13 ஆயிரத்து 084 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இதில் 4.46 லட்சம் மாணவர்களும், 4.40 லட்சம் மாணவிகளும் அடக்கம்.
ஆண்டு தேர்வு
இதே போன்று 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 7ம் தேதி முதல் 17ம் தேதி வரை ஆண்டுத் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் கடும் வெயில் காரணமாக பொதுத்தேர்வை முன்கூட்டியே முடிக்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
திருவாரூர் தேர் திருவிழா
இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆழித் தேர் திருவிழா வருகின்ற 7ம் தேதி நடைபெற உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற தேர் திருவிழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு அன்றைய தினம் மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 7ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான ஆண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வில் மாற்றம்?
மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் இந்த விடுமுறை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொறுந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 7ம் தேதி வழக்கம் போல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும். மாறாக 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு 7ம் தேதி நடைபெறுவதாக இருந்த ஆண்டு தேர்வு மறு தினம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.