Vijay Narayan: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்ததை அடுத்து, முதல்வர் விஜய், தமிழகத்தின் புதிய தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயணை நியமித்துள்ளார். இவர் ஏற்கனவே அதிமுக ஆட்சியில் இதே பதவியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றதை அடுத்து முதல்வராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து அரசில் முக்கிய பொறுப்பு வகித்த பலரும் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். குறிப்பாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக செயல்பட்டு வந்த பி.எஸ்.ராமன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.
24
யார் இந்த விஜய் நாராயண்?
இந்நிலையில் புதிய தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள விஜய் நாராயண் யார் என்பது குறித்து பார்ப்போம். விஜய் நாராயண், பள்ளி கல்வியை ராஞ்சியிலும், பட்டப்படிப்பை சென்னை லயோலா கல்லூரியிலும், சட்டப்படிப்பை சென்னை அரசு சட்டக் கல்லூரியில் முடித்தார். அரசியலமைப்பு சட்டத்தை மேம்படுத்த பணியாற்றிய குழுவில் இடம்பெற்ற பிரபல மூத்த வழக்கறிஞர் எம்.கே.நம்பியார் இவரது தாத்தா ஆவார். அதுமட்டுமல்ல மத்திய அரசின் தற்போதைய தலைமை வழக்கறிஞராக உள்ள கே.கே.வேணுகோபால் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
34
அதிமுக ஆட்சியில் தலைமை வழக்கறிஞராக இருந்தவர்
தொழிலாளர், அரசியலமைப்பு, நிர்வாகம், வணிகம் உட்பட பல்வேறு சட்டம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் ஆஜரானவர். கடந்த 2004 ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து வழங்கப்பட்டது. உச்சநீதிமன்றத்திலும் நாட்டின் பல்வேறு உயர்நீதிமன்றங்களிலும் ஆஜரானவர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி காலத்தில் 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக செயல்பட்டவர்.
விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் கார் இறக்குமதி வரி வழக்கில், விஜய் சார்பில் வழக்கறிஞராக ஆஜராகி விஜய் நாராயண் வாதாடி உள்ளார். தற்போது மீண்டும்அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள விஜய் நாராயண் விரைவில் பொறுப்பேற்க உள்ளார். இந்த நியமனம் குறித்த தகவல்கள் சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளர், மதுரை கிளைப் பதிவாளர் மற்றும் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்களுக்கு அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.