தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மாணவர்களின் உயர்கல்விக்கு முக்கியமானவை. சட்டமன்ற தேர்தல் சூழலைக் கருத்தில் கொண்டு, நடப்பு கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட உள்ளார்.
தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 10, 11, 12ம் வகுப்பு தேர்வுகள் முக்கிய தேர்வாக பார்க்கப்படுகிறது. இந்த பொதுத் தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படுகின்றன. குறிப்பாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் முக்கியம். ஏனென்றால் பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்வி செல்வதற்கு 12ம் வகுப்பு மதிப்பெண் முக்கியத்துவம் வகிக்கும். அந்த வகையில் மருத்துவ படிப்பாக இருந்தாலும், பொறியியல் படிப்பாக இருந்தாலும், கலை அறிவியல் படிப்பாக இருந்தாலும் 12ம் வகுப்பு மதிப்பெண் முக்கியமானது.
24
செய்முறைத் தேர்வுகள்
இந்த மதிப்பெண்ணை வைத்தே மாணவர்களின் எதிர்கால படிப்பு நிர்ணயம் செய்யப்படும். இதற்காக 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை தயார் படுத்துவதற்காக அரசு மற்றும் தனியார் பள்ளிகள் விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. 12ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி மாதத்திலும், 10ம் வகுப்புக்கு மார்ச் இறுதி வாரத்தில் செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம்.
34
12ம் வகுப்பு பொதுத்தேர்வு
இதைனயடுத்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் முதல் வாரம் தொடங்கி 3வது வாரம் முடிவடையும். இதனை தொடர்ந்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3வது வாரம் தொடங்கி ஏப்ரல் முதல் வாரம் வரை நடைபெறும். இந்த சூழலில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த பணிகளில் ஆசியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். இதேபோல தேர்தல் பிரச்சாரத்தால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகுவதும் பாதிக்கப்படும். எனவே இதனை கருத்தில் கொண்டு பொதுத்தேர்வு தேதியை மார்ச் மாதம் இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நுலக அரங்கில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுகிறார்.