சிறுமி ஹாசினி கொடூரன் தஷ்வந்த் ஞாபம் இருக்கா! மரண தண்டனை ரத்து! விடுதலையானது எப்படி? பரபரப்பு தகவல்!

Published : Oct 08, 2025, 12:01 PM ISTUpdated : Oct 08, 2025, 12:14 PM IST

சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் மென்பொருள் பொறியாளர் தஷ்வந்திற்கு செங்கல்பட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. பின்னர் தனது தாயையும் கொலை செய்த இவர், மும்பையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

PREV
14
சிறுமி ஹாசினி கொலை

சென்னை மாங்காடு அடுத்த மவுலிவாக்கம் மாதா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பாபு - ஸ்ரீதேவி தம்பதி. இவரது மகள் ஹாசினி (6). கடந்த 2017-ம் பிப்ரவரி மாதம் 5-ம் தேதி வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டு இருந்த சிறுமி திடீரென மாயமானார். இதுகுறித்து மாங்காடு காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அதே குடியிருப்பில் வசித்து வந்த சாப்ட்வேர் என்ஜினீயர் தஷ்வந்த் (24) என்பவர் ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து தஷ்வந்தை கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

24
தஷ்வந்த் கைது

தொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த் குன்றத்தூர் சம்பந்தம் நகர் ஸ்ரீராம் சாலையில் உள்ள ஒரு வீட்டில் தஷ்வந்த் தனது தந்தை சேகர், தாயார் சரளா ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி செலவுக்கு பணம் கொடுக்காததால் தஷ்வந்த் தனது தாயார் சரளாவை கொடூரமாக கொலை செய்தது மட்டுமல்லாமல் அவா் அணிந்து இருந்த 25 பவுன் நகைகளை திருடிக்கொண்டு தப்பி சென்றுவிட்டார். மும்பையில் பதுங்கி இருந்த தஷ்வந்தை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். 

34
தஷ்வந்த் தரப்பில் மேல்முறையீடு

இதனிடையே சிறையில் அடைக்கப்பட்ட தஷ்வந்திற்கு சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் மரண தண்டனை விதித்து செங்கல்பட்டு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இந்த மரண தண்டனையை உயர் நீதிமன்றமும் உறுதி செய்த நிலையில், இதை எதிர்த்து தஷ்வந்த் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

44
மரண தண்டனை ரத்து

அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தஷ்வந்திற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அதாவது சிசிடிவி காட்சிகளில் குற்றவாளி உறுதிப்படுத்தவில்லை. டிஎன்ஏ ஆய்வும் ஒத்துபோகவில்லை. எனவே முறையான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்து உச்ச நீதிமன்றம் அவரை விடுத்துள்ளது.

இதனிடையே தஷ்வந்த், தனது தாயை கொலை செய்த வழக்கில், அவரது தந்தை முக்கிய சாட்சியாக இருந்து வந்தார். இந்த வழக்கு செங்கல்பட்டு முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தந்தையின் சாட்சி பிறழ் சாட்சியாக மாறியதால், கொலை வழக்கில் போதிய சாட்சி இல்லை எனக் கூறி தஷ்வந்த் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Read more Photos on
click me!

Recommended Stories