இனி இவர்களுக்கும் 31 நாட்கள் கோடை விடுமுறை அறிவிப்பு! குஷியில் துள்ளிக்குதிக்கும் ஊழியர்கள்!

Published : Feb 06, 2026, 09:38 AM IST

தமிழக அங்கன்வாடி பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அரசு மே 1 முதல் 31 வரை ஒரு மாதம் முழு கோடை விடுமுறை வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

PREV
15
கோடை விடுமுறை

பள்ளி மாணவர்களுக்கு கோடை வெயிலின் தாக்கத்தின் காரணமாக கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இது ஆசிரியர்களுக்கும் பொருந்தும். இந்நிலையில் தமிழகத்தின் அங்கன்வாடி மையங்களில் பணியாற்றி வரும் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு வெயிலின் தாக்கத்தால் 30 நாட்கள் கோடை விடுமுறை வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

25
அங்கன்வாடி பணியாளர்கள்

இதுதொடர்பாக 2023ம் ஆண்டு போராட்டத்திற்கு பின்னர் 15 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 30 நாட்கள் விடுமுறை வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்த நிலையில் தற்போது 15 நாட்கள் மட்டுமே விடுமுறை அறிவிக்கட்டது. தங்களுக்கு 30 நாட்கள் கோடை விடுமுறை வழங்க வேண்டும், அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து சங்கங்களின் கோரிக்கையை ஏற்று 2026 மே மாதம் கோடை விடுமுறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மே 1 முதல் 31ம் தேதி வரை கோடை விடுமுறை என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

35
தமிழக அரசு அரசாணை வெளியீடு

இதுதொடர்பாக சமூக நலன் மற்றும் உரிமைத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் வெளியிட்டுள்ள அரசாணையில்: தமிழ்நாட்டில் அங்கன்வாடி பணிகளின் கீழ் பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர்களான அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது வாரமும், அங்கன்வாடி உதவியாளர்களுக்கு மூன்றாவது வாரமும், குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு நான்காவது வாரமும் கோடை விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த விடுமுறை நாட்களில் மாற்றுப் பணியில் குழந்தைகளுக்கு உணவூட்டும் பணிகள் எந்த இடையூறுமின்றி நிறைவேற்றப்படும்.

45
மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை

இந்த ஆண்டு மே மாதம் முழுவதும் அனைத்து குழந்தைகள் மையங்களுக்கும் கோடை விடுமுறை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதனை அரசு ஏற்று, மே மாதம் முழுவதும் அதாவது 1 முதல் 31ம் தேதி வரை அதாவது 31 நாட்களுக்கு அனைத்து குழந்தைகள் மையங்களுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது.

55
அங்கன்வாடி குழந்தைகள்

கோடை விடுமுறை காலங்களுக்கு 2 முதல் 6 வயதுக்கு உட்பட்ட முன்பருவ கல்வி பயிலும் மைய குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 50 கிராம் சத்துமாவினை கணக்கிட்டு 24 வேலை நாட்களுக்கு 1,200 கிராம் சத்துமாவாக வீட்டிற்கு எடுத்துச் சென்று பயன்படுத்தும் வகையில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு கோடை விடுமுறை தொடங்குவதற்கு முன்னர் வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories