“அரசியலில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்” - அண்ணாமலை திட்டவட்டம்

Published : Feb 06, 2026, 07:26 AM IST

Tamil Nadu BJP: விஜயையும், தவெகவையும் இன்னும் நான் அடிக்க ஆரம்பிக்கவில்லை, இனிதான் அடிப்பேன் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை காட்டமாக தெரிவித்துள்ளார்.

PREV
14
விஜய்யை இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கல..

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “விஜயையும், தவெகவையும் இன்னும் நான் அடிக்க ஆரம்பிக்கவில்லை, இனிதான் அடிப்பேன். டப்பா இன்ஜின் என கூறிய விஜய்க்கு பதிலடி கொடுப்போம். அல்லு சில்லறை வச்சு பேசுறதுக்கு நாங்களும் அதே ஸ்டைலில் பதில் அளிப்போம். எம்.எல்.ஏ பழனியாண்டி செய்தியாளர் மீது தாக்கி சேதப்படுத்தியுள்ளார். கரூர் எஸ்பி கொடுத்த அறிக்கை பொய், சட்டத்துக்கு விரோதமான குவாரி குறித்து ஒளிப்பதிவு செய்தவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க‌வேண்டும். இதில் நேரடியாக முதல்வர் தலையிட வேண்டும்‌ எம்எல்ஏ வாக இருந்தாலும் எப்ஐஆர் போடுங்க.

24
நீதிமன்றத்தில் வெட்கி தலைகுனிந்து நிற்கும் தமிழக அரசு

தமிழகத்தில் அதிகமாக சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதே திமுகவினரால் தான்.. சட்டம் ஒழுங்கு அதளபாதளத்திற்கு சென்றுள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆட்சியர் மன்னிப்பு கேட்பது அரசு கேட்டது போல தான். நீதிமன்றத்தில் அரசு வெட்கி தலைகுனிந்து உள்ளது தமிழக மக்களுக்கு தெரிந்துவிட்டது. வாக்கு அரசியலுக்காக திருப்பரங்குன்றம் விவகாரத்தை கொண்டுவந்துள்ளார்கள் என புரிந்துகொண்டார்கள்.

தமிழகம், காங்கிரஸ் விரும்பும் மாநிலமாக பல ஆண்டு காலம் இருந்தது. காமராஜர் உள்ளிட்ட அடையாள தலைவர்கள் இருந்தனர் தமிழகத்தில்.ஆனால் இன்றைய காங்கிரஸ் பிரவீன்சக்கரவர்த்தி பிரதிபலிக்கும் சக்கரவர்த்தியாக உள்ளார். காங்கிரஸ் சொந்த கட்சி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க முடியாத கட்சியாக உள்ளது.

34
மதுரையை குப்பை நகரமாக்கிய ஆட்சியாளர்கள்

தமிழ்சங்கம் பார்த்த மதுரை வாரணாசிக்கு இணையான மதுரை. வாரணாசி எங்கு உள்ளது? மதுரையை குப்பை நகரமாக உள்ளது. சு.வெங்கடேசன் திமுக பற்றி மட்டும் பேசமாட்டார் மற்றதை பேசுவார், பாராளுமன்றத்தில் மோடியை பற்றி பொய் சொல்வார். பாராளுமன்றத்தில் மக்கள் நலன் குறித்து என்றாவது பேசியிருக்கிறாரா?

44
அரசியலில் இருந்து பின்வாங்க மாட்டேன்

மேயர் இல்லாத மாநகராட்சி என்பதால் அமைச்சர்கள் தனிக்காட்டு ராஜாவாக உள்ளனர். இருவரின் தனிப்பட்ட ஈகோவால் மதுரை குப்பை நகராக மாறியுள்ளது. தேர்தல் பொறுப்பாளர் என்பது அமைப்பு ஆத்மார்த்தமான வேலை அதை செய்ய நேரம் கொடுத்து செய்ய வேண்டும், நேரம் கொடுக்க முடியாத சூழலில் உள்ளேன். மற்றபடி அரசியல் வேலை பணி நேரம் இருக்கும் போது வருகிறேன். அரசியலை பொறுத்தவரை அரசியல் கேள்விக்கு பதில் அளிக்கிறேன். நான் அரசியலில் இருந்து பின்வாங்க போவதில்லை” என்றார்.

Read more Photos on
click me!

Recommended Stories