கவினுடன் என்ன உறவு? உண்மை தெரியாமல் பேச வேண்டாம்! அப்பா, அம்மாவுக்கு எதுவும் தெரியாது! சுபாஷினி பகீர்!

Published : Jul 31, 2025, 02:37 PM IST

தூத்துக்குடியை சேர்ந்த கவின்குமார், நெல்லையில் காதலியின் சகோதரரால் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், கவினின் காதலி சுபாஷினி பரபரப்பு வீடியோ வெளியிட்டு, பெற்றோரை தண்டிக்க வேண்டாம்.

PREV
14

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கவின்குமார் (26). இவர் சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த போலீஸ் தம்பதியினரான சரவணன்- கிருஷ்ணகுமாரியின் மகளை காதலித்து வந்தார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டார் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

24

இந்நிலையில் தாத்தா செல்லத்துரையை பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கவின் கடந்த 27ம் தேதி அழைத்து வந்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீஸ் தம்பதியின் மகன் சுர்ஜித் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கவினை பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்தார். இதனையடுத்து சுர்ஜித் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த கொலைக்கு தூண்டுதலாக இருந்ததாக போலீஸ் தம்பதியான சரவணன்- கிருஷ்ணகுமார் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் சிறப்பு காவல் படை எஸ்.ஐ சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

34

இந்நிலையில், நெல்லையில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் காதலித்தாக கூறப்படும் இளம்பெண் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் தான் சுபாஷினி. எனக்கும் கவினுக்கும் என்ன நடந்தது என்று எனக்கு அவனுக்கும் மட்டும் தான் தெரியும். எங்க ரிலேஷன்ஷிப் பத்தியோ எங்க இரண்டு பேரை பத்தியோ இனி யாரும் தப்பா பேச வேண்டாம். யாருக்கு எதுவும் தெரியாது. ஒன்னும் தெரியாமல் எல்லாரும் நிறைய பேச வேண்டாம்.

44

கவின் கொலை வழக்கில் என் தாய் மற்றும் தந்தையை தண்டிக்க நினைப்பது தவறு அவர்களுக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவங்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என கூறுவது தவறு. இவ்வளவு சுச்சுவேஷன்ல எல்லாரும் அவங்க அவங்களுக்கு என்ன தோணுதோ அது எல்லாத்தையும் பேசிட்டீங்க என்னுடைய பீலிங்ஸ் என்ன நான் என்ன நினைக்கிற என்பதை ரெஸ்பெக்ட் பண்ணி ஒரு பொண்ணு மட்டும் பேசி இருக்காங்க. அவங்களுக்கு ரொம்ப நன்றி என தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories