ஜெயலலிதாவின் பாஜக அரசைக் கவிழ்த்தது வரலாற்றுப் பிழை என கடம்பூர் ராஜூ கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கே.சி. பழனிசாமி கண்டனம் தெரிவித்து, எடப்பாடி பழனிசாமியின் மௌனம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்நிலையில் ஜெயலலிதா குறித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவின் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 1998-ல் ஜெயலலிதா வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசைக் கவிழ்த்தது வரலாற்றுப் பிழை என்றார்.
25
ஓபிஎஸ் கண்டனம்
மேலும் சுப்பிரமணிய சுவாமியின் தவறான வழிகாட்டுதலால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இதனால் திமுக கூட்டணி 14 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்ததாகவும் கூறினார். இவரது பேச்சு அதிமுக தொண்டர்கள் மத்தியில் சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. கடம்பூர் ராஜூ பேச்சுக்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பாஜக குறித்து விமர்சித்த போது 30 நிமிடங்களில் என்னைக் கட்சியை விட்டு நீக்கி எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா அம்மா குறித்த கடம்பூர் ராஜுவின் விமர்சனத்திற்கு ஏன் இன்னும் மௌனம் காக்கிறார்? என கே.சி.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
35
கே.சி.பழனிசாமி
இதுதொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: ஜெயலலிதா அம்மா செய்தது வரலாற்று பிழை" என்று பேசுகிற இந்த தற்குறிகள் தங்கள் ராஜவிசுவாசத்தை காட்ட பாஜகவில் இணைந்து செயல்படலாம், அதிமுகவில் தொடர்வதற்கு அவர்களுக்கு அருகதை இல்லை.
பாஜக குறித்து விமர்சித்த போது 30 நிமிடங்களில் என்னைக் கட்சியை விட்டு நீக்கி எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா அம்மா குறித்த கடம்பூர் ராஜுவின் விமர்சனத்திற்கு ஏன் இன்னும் மௌனம் காக்கிறார்? கடம்பூர் ராஜுவை கட்சியிலிருந்து நீக்குவாரா அல்லது தொண்டர்கள் தகுந்த பதிலடி கொடுக்கும் வரை காத்திருப்பாரா?
55
பாஜக - அதிமுக
பாஜகவோடு இணைந்ததால் திமுகவினர் பெரும் பணம் பொருள் சம்பாதித்தார்கள் என்றால், இன்னும் அதிக பணம் பொருள் சம்பாதிக்க எடப்பாடி பழனிசாமி போன்றவர்கள் தற்போது பாஜகவோடு இணைந்திருக்கிறார்கள் என்கிறாரா? என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.