மோடியை சந்திக்க மீண்டும் அனுமதி கேட்ட ஸ்டாலின்.! அமைதி காக்கும் மத்திய அரசு

Published : Apr 02, 2025, 09:09 AM IST

தொகுதி மறுவரையால் தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமரை சந்திக்க அனுமதி கோரி கடிதம் எழுதியுள்ளார். அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை பிரதமரிடம் தெரிவிக்க ஸ்டாலின் முயற்சி.

PREV
14
மோடியை சந்திக்க மீண்டும் அனுமதி கேட்ட ஸ்டாலின்.! அமைதி காக்கும் மத்திய அரசு

Constituency redefinition impact : தொகுதி மறுவரையால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரம் வட மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதலமைச்சர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

இதனையடுத்து தொகுதி மறுவரையால் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களின் பிரதிநிதிகளின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக பிரதமரை சந்திக்க முடிவு எடுக்கப்பட்டது. 

24

கூட்டு நடவடிக்கை குழு தீர்மானம்

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தொகுதி மறுவறை தொடர்பகாக சமீபத்திய விவாதங்களில் இருந்து வெளிப்பட்ட எல்லை நிர்ணயம் தொடர்பான கருத்துகளை  முன்வைக்க, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திக்க அனுமதி தருமாறு கேட்டுக்கொள்கிறேன். கடந்த மார்ச் 22, 2025 அன்று, 'நியாயமான எல்லை நிர்ணயம்' தொடர்பான முதல் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேஏசி) கூட்டத்தை சென்னையில் நடத்தியது,

34
mk stalin

பிரதமரை சந்திக்க திட்டம்

இது இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு அரசியல் சித்தாந்தங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில்  முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர் மற்றும் முக்கிய தலைவர்களை ஒன்றிணைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டமாக இருந்தது. இந்த கூட்டங்களில் நடைபெற்ற விவாதங்களில் இருந்து வெளிப்படும் குரல்கள் அரசியல் எல்லைகளைக் கடந்து, நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நியாயமான பிரதிநிதித்துவம் கோரும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த குடிமக்களின் கவலைகளை உள்ளடக்கியதாகும்.

எனவே இந்த விவகாரம் நமது மாநிலங்களுக்கும் குடிமக்களுக்கும் கணிசமான முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், கூட்டு நடவடிக்கைக் குழுவின் சார்பாக முறைப்படி எடுக்கப்பட்ட தீர்மானங்களை சமர்ப்பிக்க தங்களைச் சந்திக்க அனுமதி தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் நேர்மறையான பதிலை விரைவில் எதிர்பார்க்கிறேன் என குறிப்பிட்டிருந்தார். 

44
modi stalin

மீண்டும் கோரிக்கை வைத்த ஸ்டாலின்

இந்த நிலையில் இந்த கடிதத்தை தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்த முதலமைச்சர் ஸ்டாலின்.  மீண்டும் பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டுள்ளார். அந்த பதிவில், எல்லை நிர்ணயம் தொடர்பான மாநிலங்களின் கவலைகள் குறித்து எங்கள் தீர்மானங்களை  வழங்க,

பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களுடன் சேர்ந்து, உங்களை சந்திக்க நேரம் கோரியுள்ளேன்.  நமது மக்களுக்கு இந்த முக்கியமான பிரச்சினையில் எங்கள் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை தெரிவிக்க நாங்கள் அவசரமாக உங்கள் நேரத்தைக் கோருகிறோம். உங்கள் விரைவான பதிலுக்காகக் காத்திருக்கிறோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories