திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா
திமுக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி தொகுதியின் எம்.பி.யாக இருப்பவர் ஆ.ராசா. அவ்வப்போது இந்துக்களுக்கு எதிராக சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்தான், நீ பஞ்சமன்தான். இந்துவாக இருக்கும் வரை தீண்டதகாதவன் தான். சூத்திரன் என்றால் விபச்சாரியின் மகன் என்று இந்து மதம் சொல்கிறது. அப்படி என்றால் இங்கு எத்தனை பேர் விபச்சாரி மகனாக இருக்க விரும்புகிறீர்கள் என்று பேசியதை பெரும் சர்ச்சையாகி கண்டனங்கள் எழுந்தன.
ஆ.ராசா சர்ச்சை பேச்சு
இந்நிலையில் நீலகிரியில் திமுக மாணவரணி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ஆ.ராசா பேசிய வீடியோ வைரலாகி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில்: மாணவரணியாவது நெற்றியில் பொட்டு வைக்காதீர்கள். அதற்காக சாமி கும்பிட வேண்டாம் என்று சொல்லவில்லை. அன்புதான் கடவுள் என்று சொன்னாலும், மனிதனுக்கு மனிதம் காட்டுகின்ற இரக்க உணர்வை தான் கடவுள் இருக்கிறான் என்று சொன்னாலும், கள்ளம் இல்லாத உள்ளம் அதுதான் கடவுளின் இல்லம் என்று சொன்னாலும், அண்ணா சொன்னதைப் போல ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்று சொன்னாலும் அப்படிப்பட்ட கடவுள் மீது நமக்கு கோபம் எதுவும் இல்லை.
இதையும் படிங்க: சுயநல அரசியல்வாதிகள்! ஸ்டாலினை விமர்சித்த யோகி ஆதித்யநாத்! தரமான பதிலடி கொடுத்த கார்த்தி சிதம்பரம்!
பொட்டு வைத்து கயிறு கட்டினால் சங்கி
பொட்டு வைத்துக்கொள்ளுங்கள் வேண்டாம் என சொல்லவில்லை. நீங்களும் பொட்டு வைத்து கயிறு கட்டி, சங்கியும் பொட்டு வைத்து கயிறு கட்டினால் யார் சங்கி, யார் திமுககாரன் என்று தெரியாமல் போய்விடும். ஆகவே, சாமி கும்பிடுங்கள். விபூதி வைத்தால் ஏற்றுக்கொள்ளுங்கள்.
எடப்பாடி பழனிசாமி
ஆனால், திமுக வேட்டி கட்டிவிட்டால் அதை அழித்துவிடுங்கள். கொள்கை இல்லாமல் போனால் அந்த அரசியல் கட்சி அழிந்து போய்விடும். அப்படி அழிவை நோக்கி நகருந்து கொண்டிருக்கும் கட்சிதான் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக என்று தெரிவித்தார்.