CBSE exam result date : கல்வி தான் மாணவர்களை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் முக்கிய ஆயுதம் ஆகும். அந்த வகையில் தற்போது உள்ள நவீன தொழில்நுட்பங்களுக்கு இணையாக மாணவர்களுக்கு கல்வியும் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதன் படி மத்திய அரசின் சிபிஎஸ்இ (CBSE) 2025-26 கல்வியாண்டிற்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் புதிய பாடத்திட்டத்தை மாற்றம் செய்யப்பட்டு வெளியிட்டுள்ளது. அதன்படி 10ஆம் வகுப்பில் ஏற்கனவே உள்ள தேர்வு நடைமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைச் செய்துள்ளது.
சிபிஎஸ்இ பாட திட்டம் மாற்றம்
அந்த வகையில் இந்த ஆண்டு முதல், சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை, பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறும். இது மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்களை பெறவும் தேர்ச்சி பெறவும் அதிக வாய்ப்புகளைத் தருகிறது. மேலும் பாட திட்டத்தின் படி மனப்பாடம் செய்வதைவிட, திறன் சார்ந்த கேள்விகள் மூலம் புரிந்து கொண்டு தேர்வு எழுதவும் வழி வகை செய்கிறது. 10வது மற்றும் 12வது புதிய பாடத்திட்டம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பைக் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பார்க்கவும்.
https://docs.google.com/viewerng/viewer?url=https://cbseacademic.nic.in/web_material/Circulars/2025/14_Circular_2025.pdf
சிபிஎஸ்இ தேர்வுகள் எப்போது.?
இதனிடையே சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 10 வது மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுவானது முடிவடைந்துள்ளது. அதன் படி, பிப்ரவரி மாதம் 15ம் தேதி தொடங்கி மார்ச் மாதம் இறுதி வரை நடைபெற்றது. 2024-25 வாரியத் தேர்வுகளை சுமார் 42 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர்.
இதன் படி 10 ஆம் வகுப்பு படிக்கும் 24.12 லட்சம் மாணவர்கள் 84 பாடங்களில் தேர்வு எழுதியுள்ளனர், அதே நேரத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கு 120 பாடங்களுக்கு 17.88 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.
தேர்வு முடிவுகள் எப்போது.?
இந்த நிலையில் மாணவர்களுக்கு அடுத்த கட்டத்திற்கு செல்ல இந்த தேர்வு முடிவுகள் முக்கிய அங்கம் வகிக்கிறது. ஆனால் இதுவரை தேர்வு முடிவுகள் எந்த தேதியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருந்த போதும் குறிப்பிட்ட தேதியில் தான் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு முடிவு வெளியிட்டு வருகிறது. இதன் படி 2023ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதியும், 2024ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் தேதியும் 10 வது மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவானது வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய ஆண்டுகளில் கொரோனா பாதிப்பு காரணமாக தேர்வு முடிவுகள் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் வெளியிடப்பட்டது. எனவே இந்த ஆண்டிற்கான சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே மாதம் 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதிக்குள் வெளியாகும் என கல்வியாளர்கள் கூறுகின்றனர்.