பள்ளி மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி! ஏப்ரல் 11ம் விடுமுறை! என்ன காரணம் தெரியுமா?
School College Holiday: பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு ஏப்ரல் 11ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது.
School College Holiday: பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு ஏப்ரல் 11ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது.
தமிழகத்தில் பொது விடுமுறை மற்றும் அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து கோவில் திருவிழாக்கள், மசூதி, தேவாலயங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை அளித்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 11ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: பங்குனி உத்திர திருநாள் (பங்குனி -28) ஏப்ரல் 11ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அரசு பொதுத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை (Local Holiday) நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிகாலையிலேயே பொதுமக்களுக்கு குட்நியூஸ்! சிலிண்டர் விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா?
மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத் தேர்வுகள் ஏதுமிருப்பின் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள இந்த உள்ளுர் விடுமுறையானது பொருந்தாது எனவும், மேற்படி ஏப்ரல் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instrument Act-1881)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்புகள் (Government Securities) தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: 10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய செய்தி! கூடுதலாக ஒரு மணி நேரம்! அன்பில் மகேஷ் தகவல்!
மேலே குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஏப்ரல் 26ம் தேதி 4-வது சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. அச்சமயம் கோடை விடுமுறையில் உள்ள கல்வி நிறுவன மாணவ மாணவியருக்கு இவ்வேலை நாள் பொருந்தாது என தெரிவித்துள்ளார்.