10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று! எப்படி தெரிந்துக்கொள்வது? ரோல் நம்பர் இல்லாமலும் பார்க்கலாம்!

Published : May 20, 2026, 08:20 AM IST

TN SSLC Result 2026 : தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளங்களில் பார்ப்பது எப்படி என்றும், ஒருவேளை ரோல் நம்பர் மறந்துவிட்டால் பெயரை மட்டும் வைத்து முடிவுகளைக் கண்டறியும் வழிமுறை.

PREV
16
10ம் வகுப்பு பொதுத்தேர்வு

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதி முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 06ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள் மார்ச் 11, ஆங்கில மொழிப்பாடம் மார்ச் 16, கணிதம் மார்ச் 25, அறிவியல் மார்ச் 30, ஏப்ரல் 2 தேதி சமூக அறிவியல், விருப்ப மொழிப்பாட தேர்வு ஏப்ரல் 6 தேதி நடைபெற்றது.

26
10ம் வகுப்பு தேர்வை எழுதிய 9 லட்சம் பேர்

இந்த தேர்வுகளை 12,467 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 8,82,806, தனித்தேர்வர்கள் 25,801 பேர், சிறைவாசிகள் 395 பேர் என மொத்தம் 9,09,002 தேர்வர்கள் 4,219 தேர்வு மையங்களில் தேர்வு எழுதப்பட்டது. இந்த தேர்வு பணிகளில் ஒவ்வொரு நாளும் சுமார் 47,500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்வு முறைகேடுகளை தடுக்க சுமார் 4,950-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

36
10ம் முடிவுகள் இன்று வெளியாகிறது

இந்நிலையில் 10ம் வகுப்பு தமிழ் பொதுத்தேர்வை 10,877 மாணவர்களும். ஆங்கிலம் பொதுத் தேர்வை 10,369 மாணவர்களும், கணிதம் பொதுத் தேர்வை 11,284 மாணவர்களும், அறிவியல் தேர்வு எழுத 11,341 மாணவர்களும், சமூக அறிவியல் தேர்வை 11,228 மாணவர்கள் எழுதவில்லை. இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெற்றதை அடுத்து மே 20ம் தேதியான இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட உள்ளார்.

46
தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?

தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.digilocker.gov.in ஆகிய இணையதளத்தில் சென்று பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து அறிந்து கொள்ளலாம். மேலும் மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் வாயிலாகவும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் குறித்த சந்தேகங்கள் இருப்பின் 14417 உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது

56
ரோல் நம்பர் மறந்து போனால் என்ன செய்வது?

அதுமட்டுமல்ல தேர்வு நம்பரை மறந்தவர்கள், தங்களின் பெயரை மட்டுமே வைத்து எப்படி ரிசல்ட் பார்ப்பது என்பது குறித்து பார்க்கலாம். தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in ஆகியவற்றில் இதுபோன்ற வசதி இல்லை. ஆனால் IndiaResults போன்ற சில தனியார் கல்வி இணையதளங்கள் தேர்வு முடிவுகள் வெளியான சில மணி நேரங்களுக்குப் பிறகு மாணவர்களின் வசதிக்காக 'Name Wise Search' வசதியைத் தற்காலிகமாக வழங்கிறது.

66
பெயரை வைத்துதேடும் வழிமுறை

இந்த தனியார் கல்வி இணையதளங்களின் முகப்பு பக்கத்திற்குச் சென்று 'Tamil Nadu' மாநிலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அங்கு 'TN SSLC Result 2026' என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஓபனாகும் பக்கத்தில் ரோல் நம்பருக்குக் கீழே 'Enter Name' என்ற பாக்ஸ் இருக்கும். அதில் மாணவர் தன் பெயரைப் பதிவு செய்ய வேண்டும். உங்கள் பெயரை உள்ளிட்டதும், அதே பெயரில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களின் பட்டியலும், அவர்களின் பள்ளி மற்றும் தந்தையின் பெயருடன் திரையில் தோன்றும். அதிலிருந்து உங்களுடைய சரியான பள்ளியின் பெயரை வைத்து, உங்கள் ரோல் நம்பரைக் கண்டறிந்து மதிப்பெண்களைப் பார்த்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories