TVK Vs CPM: ஆதரவை வாபஸ் பெறுவோம்.. தவெக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை!

Published : May 19, 2026, 10:45 PM IST

TVK Vijay: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தவெக அரசுக்கு ஆதரவளித்த நிலையில், அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. அதிமுகவினரை அமைச்சரவையில் சேர்த்தால், தவெக அரசுக்கு அளித்துள்ள ஆதரவை மறுபரிசீலனை செய்வோம்.

PREV
14

தமிழக சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுகவைச் சேர்ந்த சி.வி. சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையில் 25 எம்.எல்.ஏ.க்கள் தவெக அரசுக்கு ஆதரவளித்தன. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கும், சி.வி. சண்முகத்திற்கும் இடையே அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. இன்னொரு பக்கம் தவெக ஆதரவு அளித்த அதிமுகவின் ஒரு தரப்பினருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

24

இந்நிலையில் அதிமுகவின் ஒரு கோஷ்டியை சேர்த்துக்கொண்டு ஆட்சியமைக்கும் முடிவுக்கு தவெக செல்லுமானால், நிச்சயமாக எங்களுடைய முடிவை மறு பரிசீலனை செய்வோம் என சிபிஎம் தெரிவித்துள்ளது.

34

இதுகுறித்து திருத்துறைப்பூண்டியில் சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு தமிழகத்தில் அமைய வேண்டும் என்ற நோக்கத்தோடு தவெகவிற்கு வெளியில் இருந்து ஆதரவு தருவது என்ற வகையில் இடதுசாரிகள் கட்சிகள், விசிக கட்சிகள் ஆதரவு கொடுத்து இருக்கிறோம். அதன்படி தவெக ஆட்சி அமைந்துள்ளது. இந்நிலையில் அதிமுகவினரை அமைச்சரவையில் சேர்க்கும் நிலைக்கு தவெக சென்றால், அது மக்கள் தீர்ப்புக்கு எதிரானதாகவே இருக்கும். அப்படி நடக்குமானால், தவெக அரசுக்கான ஆதரவு என்ற எங்களது முடிவை மறுபரிசீலனை செய்வோம் என அதிர்ச்சி அளித்துள்ளார்.

44

அதிமுக, திமுகவுக்கு எதிராகத்தான் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது அதிமுக அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வது என்பது மக்கள் தீர்ப்பு எதிரானது. நல்லாட்சி தருவேன் என்று கூறியதற்கு விரோதமாக இது அமைந்து விடும். தவெகவுக்கு ஆதரவளித்திருப்பது மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்க கூடாது. கொல்லைப்புறம் வழியாக பாஜக ஆளுநர் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான். அத்தகைய நிலைக்கு அவர்கள் செல்லமாட்டார்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories