Published : Aug 07, 2025, 08:09 AM ISTUpdated : Aug 07, 2025, 08:10 AM IST
திருப்பூர் மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் என்பவர் காவல் துறையினரால் சுட்டு கொலை.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரனுக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இந்த தோப்பில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகின்றார். மூர்த்திக்கு மணிகண்டன், தங்கபாண்டி என இரு மகன்கள் உள்ளனர். இதனிடையே செவ்வாய் கிழமை இரவு மது அருந்திய நிலையில் இவர்கள் மூவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகளப்பாக மாறியுள்ளது.
24
மோதல் தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல்
இது தொடர்பாக தோட்டத்தின் மேலாளர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல், காவலர் அழகு ராஜா உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு மோதலில் ஈடுபட்டவர்களை கண்டித்துள்ளார். அப்போது மூர்த்தியின் மகன்கள் மற்றும் SSI சண்முகவேல் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
34
காவல் அதிகாரி படுகொலை
வாக்குவாதம் முற்றிய நிலையில் மூர்த்தி, மணிகண்டன், தங்கபாண்டியன் மூவரும் இணைந்து இளநீர் வெட்டும் அரிவாளைக் கொண்டு சண்முகவேலை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காவல் அதிகாரியை கொலை செய்த மூர்த்தி, தங்க பாண்டியன் என இருவரும் புதன் கிழமை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். மணிகண்டன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த நிலையில், நேற்று இரவு அவரும் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட மணிகண்டன் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தை சிக்கனூத்து உப்பாறு அணைப் பகுதி அருகே பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து SI சரவணன் தலைமையிலான காவல் அதிகாரிகள் குழு ஆயுதத்தை மீட்பதற்காக மணிகண்டனை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அரிவாளைக் கைப்பறிய மணிகண்டன் காவலர்களை வெட்ட முயன்றுள்ளார் இதனால் அதிர்ச்சி அடைந்த காவலர்கள் மணிகண்டனை எச்சரித்துள்ளனர். ஆனால் அதனைப் பொருட்படுத்தாமல் அவர் அரிவாளார் தாக்கியுள்ளார். இதனால் காவலருக்கு வெட்டு காயம் ஏற்பட்ட நிலையில் மணிகண்டனை காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர்.