ஹேப்பி நியூஸ்! நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

Published : Feb 09, 2025, 06:11 PM ISTUpdated : Feb 09, 2025, 06:47 PM IST

கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனையொட்டி பேரூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

PREV
15
ஹேப்பி நியூஸ்! நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
ஹேப்பி நியூஸ்! நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கோவை மாவட்டம் பேரூர் அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோவில்  உள்ளது. இக்கோவில் 1800 ஆண்டுகள் பழமையான கோவில்.  கரிகால் சோழன் என்னும் சோழ மன்னனால் இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில். இந்த கோயில் சிவபெருமானின் பல்வேறு திருவிளையாடல்களை நிகழ்த்திய ஸ்தலமாகவும், கோயிலின் கட்டமைப்பு பல்வேறு கலை நுட்பத்துடன் விளங்குகிறது. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோவில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை கும்பாபிஷேகம் காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்குள் நடைபெற உள்ளது.

25
பேரூர் பட்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

இந்த கும்பாபிஷேகம் விழாவில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நாளை பேரூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார். 

35
போக்குவரத்து மாற்றம்

பேரூர் பட்டீஸ்வரர் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு நாளை கோவை பேரூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பேரூருக்கு மேற்கே தொண்டாமுத்தூர், ஆலந்துறை, செம்மேடு, பூண்டி ஆகிய புறநகர் பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள், லாரிகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் பேரூர் செட்டிபாளையம் அருகே கோவைபுதூர் மெயின் ரோடு வழியாக திருப்பி விடப்படும்.

45
போக்குவரத்து காவல்துறை

அதேபோல் காந்திபுரம், ரயில் நிலையம், டவுன்ஹால் பகுதியில் இருந்து பேரூர் நோக்கி பேரூர் மெயின் ரோட்டின் வழியே வரும் பேருந்துகள், லாரிகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் செல்வபுரம் சிவாலயா பேருந்து நிறுத்தம் அருகே புட்டுவிக்கி வழியாக சுண்டக்காமுத்தூர் மெயின் ரோடு வழியாக திருப்பி விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

55
தைப்பூசம்

மேலும் இதற்கு அடுத்த நாள் தைப்பூசம் என்பதால் அரசு விடுமுறையாகும்.  இரண்டு நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் பள்ளி கல்லூரி மாணவர்கள் குஷியில் துள்ளிக்குதிக்கின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories