தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட மோகத்தால் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், 18 வயதுக்குட்பட்டோர் விளையாடவும், நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை விளையாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் விளையாட்டுக்கு புதிய கட்டுப்பாடுகள்! இனி இவர்கள் விளையாட தடை!
தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் ஆன்லைன் சூதாட்ட மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்து கொண்டனர். இதை உடனே தடை செய்ய வேண்டும் என ராமதாஸ் மற்றும் அன்புமணி உள்ளிட்டோர் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். இதனையடுத்து தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டது.
24
இதனை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பின்னர் தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த 2023 ஆண்டு நவம்பர் 10-ஆம் தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கு விசாரணைக்கு வருவதற்குள் இதுவரை பணத்தை இழந்த 20 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். . ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு முடிவு கட்டுவதற்கான ஒரே வழி சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவது தான் ராமதாஸ் கூறிவருகிறார்.
34
online rummy
இந்நிலையில், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் விதிகளை கடுமையாக்கி தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதாவது 18 வயதுக்குட்பட்டவர்கள் ஆன்லைனில் பணம் கட்டி விளையாட தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஆணையம் தடை விதித்துள்ளது. நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை ஆன்லைன் கேமில் பயனர்களை அனுமதிக்கக்கூடாது. ஆன்லைனில் விளையாடுபவர்கள் யார் என்பது குறித்து கண்டிப்பாக நிறுவனங்கள் கே.ஒய்.சி. வாங்க வேண்டும்.
44
பணம் கட்டும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதார் அட்டை சரிபார்ப்பு இனி கட்டாயம். ஆன்லைன் விளையாட்டில் தினம், வாரம், மாதம் எவ்வளவு பணம் செலவாகிறது என்று விளையாடுபவர்களுக்கு ஆன்லைன் நிறுவனம் தர வேண்டும். ஆன்லைனில் விளையாடுவோருக்கு ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் எச்சரிக்கை செய்தி அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.