எதிர்பார்த்து காத்திருந்த பயணிகள்.! மதுரை, செங்கோட்டை, திருப்பூருக்கு சிறப்பு ரயில்.! தெற்கு ரயில்வே அறிவிப்பு

Published : Sep 29, 2025, 12:11 PM IST

Special trains : ஆயுத பூஜை மற்றும் காலாண்டு விடுமுறையை முன்னிட்டு, தெற்கு ரயில்வே மூன்று சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. சென்னை - திருவனந்தபுரம், தாம்பரம் - செங்கோட்டை, மற்றும் சென்னை - மதுரை ஆகிய வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்படும். 

PREV
15

காலாண்டு விடுமுறை மற்றும் ஆயூத பூஜை, விஜயதசமி விடுமுறையையொட்டி பொதுமக்கள் வெளியூர்களுக்கு பயணம் செல்ல திட்டமிட்டுள்ளனர். ஆனால் பெரும்பாலான ரயில்களில் முன்பதிவு முடிவடைந்துள்ளது. இதன் காரணமாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா.? என பொதுமக்கள் காத்திருந்தனர். அந்த வகையில் தெற்கு ரயில்வே பயணிகள் நெரிசலை கருத்தில் கொண்டு மூன்று சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது. 

சென்னை எக்மோர் – திருவனந்தபுரம் – சென்னை எக்மோர் சிறப்பு ரயில் (எண் 06075/06076) செப்டம்பர் 30 ஆம் தேதி இரவு 10.15 மணிக்கு சென்னை எக்மோரிலிருந்து புறப்பட்டு, மறுநாள் மதியம் 2.05 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். அதேபோல், அக்டோபர் 5 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை எக்மோருக்கு வரும்.

25

இந்த ரயிலில் 1 AC Two Tier, 3 AC Three Tier, 8 ஸ்லீப்பர், 5 பொதுப்பயணி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர், பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம், கொல்லம் போன்ற ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலுக்கான முன்பதிவு தற்போது திறந்துள்ளது.

35

அதேபோல், தாம்பரம் – செங்கோட்டை ஒருவழி அதிவேக சிறப்பு ரயில் (எண் 06013) செப்டம்பர் 30 ஆம் தேதி மாலை 4.15 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு, அக்டோபர் 1 ஆம் தேதி அதிகாலை 3.00 மணிக்கு செங்கோட்டை வந்தடையும். இதில் 10 Chair Car Coaches, 3 General Coaches மற்றும் 2 Luggage cum Brake Vans அமைக்கப்பட்டுள்ளன. 

இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, மதுரை, சிவகாசி, ராஜபாளையம், தென்காசி உள்ளிட்ட பல இடங்களில் வழியாக செல்லவுள்ளது. இந்த ரயில் முன்பதிவு இல்லாமல், பொதுப் பயணிகளுக்காக மட்டும் இயக்கப்படுகிறது.

45

மற்றொரு சிறப்பு சேவையாக சென்னை எக்மோர் – மதுரை MEMU ஒருவழி சிறப்பு ரயில் (எண் 06161) செப்டம்பர் 30 ஆம் தேதி இரவு 11.45 மணிக்கு சென்னை எக்மோரிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 10.15 மணிக்கு மதுரையை அடையும். 

இதில் 12 MEMU கோச்சுகள் அமைக்கப்பட்டுள்ளன. தாம்பரம், செங்கல்பட்டு, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், கோடைக்கானல் ரோடு ஆகிய இடங்கள் வழியாக இந்த ரயில் இயக்கப்படவுள்ளது.  இந்த ரயிலும் முன்பதிவு இல்லாமல், பொதுப் பயணிகளுக்காக மட்டுமே இயக்கப்படுகிறது.

55

ஆயுத பூஜை, விஜய தசமி மற்றும் காந்தி ஜெயந்தி தின விடுமுறையையொட்டி யணிகள் கூட்டத்தை தவிர்க்க தெற்கு ரயில்வே மூன்று சிறப்பு ரயில்களை இயக்குகிறது. இதில் சென்னை – திருவனந்தபுரம் ரயில் மட்டும் முன்பதிவு சேவையுடன் இருக்கும். மற்ற இரண்டு ரயில்கள் (தாம்பரம் – செங்கோட்டை, சென்னை – மதுரை) பொதுப் பயணிகளுக்கான Unreserved Specials ஆகும்.

Read more Photos on
click me!

Recommended Stories