நெல்லை டூ சென்னை சிறப்பு ரயில்.! உடனே முன்பதிவு செய்யுங்க- தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு

Published : Oct 20, 2025, 11:06 AM IST

Nellai to Chennai : தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து மக்கள் பணிக்கு திரும்பவுள்ள நிலையில், பயணிகளின் வசதிக்காக, தெற்கு ரயில்வே சென்னை - திருநெல்வேலி மற்றும் பெங்களூரு - காரக்பூர் இடையே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

PREV
14

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும் தொடர் விடுமுறை காரணமாக மக்கள் தங்களது சொந்த ஊரிலும், உறவினர்களோடும், நண்பர்களோடு கொண்டாட வெளியூர்களுக்கு புறப்பட்டுள்ளனர். 

சென்னையில் இருந்து மட்டும் சுமார் 20 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். விடுமுறையானது நாளையோடு முடிவடையவுள்ளதையடுத்து மீண்டும் தங்கள் பணி செய்யும் இடங்களுக்கு திரும்பவுள்ளனர். இதன் காரணமாக அனைத்து ரயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு முடிவடைந்துள்ளது. இதனால் சிறப்பு ரயில் இயக்கப்படுமா.? என மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

24

இந்த நிலையில் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் எண்: 06166 / 06165 திருநெல்வேலி – சென்னை எக்மோர் – திருநெல்வேலி சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. 

(06166) திருநெல்வேலியில் இருந்து இரவு 11.55 (22 அக்டோபர் 2025) புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 10.55 மணிக்கு சென்னை எக்மோர் வந்தடைகிறது. மறுமார்க்கத்தில் (06165) சென்னை எக்மோர் மதியம் 12.30 (23 அக்டோபர் 2025) புறப்படும் சிறப்பு ரயில் அடுத்த நாள் அதிகாலை 12.15 மணிக்கு திருநெல்வேலி சென்று சேர்கிறது.

34

இந்த சிறப்பு ரயிலில் 1-ஏ.சி டூ டயர், 2-ஏ.சி த்ரீ டயர், 9-ஸ்லீப்பர் கிளாஸ், 4-ஜெனரல் கிளாஸ், 2-பிரேக் வான் (லக்கேஜ் பெட்டிகள்) இணைக்கப்படவுள்ளது. 

இந்த சிறப்பு ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, தின்டுக்கல், திருச்சி, வில்லுப்புரம், தாம்பரம் உள்ளிட்ட முக்கிய நிறுத்தங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

44

இதே போல பெங்களூரு – காரக்பூர் – பெங்களூர் கண்டோன்மெண்ட் (ரயில் எண்: 06263 / 06264) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. 06263: பெங்களூரில் இருந்து காலை 9.50 மணிக்கு (22 & 29 அக்டோபர் 2025) புறப்படும் ரயில் அடுத்த நாள் மாலை 4.30 மணிக்கு காரக்பூர் சென்று சேரும், 

06264: காரக்பூர் மாலை 5.45 மணிக்கு (23 & 30 அக்டோபர் 2025) புறப்படும் ரயில் அடுத்த நாள் இரவு 10.30 மணிக்கு பெங்களூர் கண்டோன்மெண்ட் சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிலில் 1-ஏ.சி. ப்ரஸ்ட் கிளாஸ் கம் டூ டயர், 1-ஏ.சி டூ டயர், 2-ஏ.சி த்ரீ டயர், 10-ஸ்லீப்பர், 4-ஜெனரல் ஆகிய பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories