Trichy to Tambaram Train: திருச்சி டூ தாம்பரம்! முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கம்! எத்தனை மணிக்கு தெரியுமா?

First Published | May 26, 2024, 12:35 PM IST

வார இறுதி நாளை முன்னிட்டு திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கு இன்று இரவு 11 மணிக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

School Reopen

கோடை விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் அண்டை மாநிலங்களுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 6ம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. ஆகையால், பலரும் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பிக் கொண்டிருக்கின்றனர். 

Special MEMU Train

பொதுமக்கள் எந்த சிரமம் இன்றி வந்து சேர சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் தெற்கு ரயில்வே சிறப்பு ரயிலை அறிவித்திருக்கிறது. அதாவது திருச்சியிலிருந்து, தாம்பரத்திற்கு முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரயில் இயக்கப்படுகிறது.

Tap to resize

Trichy to Tambaram Train

திருச்சியில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்படும் மெமு ரயில் பூதலூர், தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி, சிதம்பரம், கடலூர், திருப்பாதிரிபுலியூர், விழுப்புரம், திண்டிவனம், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்தில் காலை 6.05 மணிக்கு வந்து சேரும் என  தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

Latest Videos

click me!