கூடுகிறது தமிழக சட்டப்பேரவை .! வெளியாக போகுது சூப்பர் அறிவிப்பு.!

First Published | Nov 25, 2024, 12:35 PM IST

When is Tamil Nadu Assembly Session: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கவுள்ளது.சட்ட ஒழுங்கு, அரசு ஊழியர்கள் கோரிக்கை, தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்டவை விவாதிக்கப்படும். மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம் குறித்த அறிவிப்பும் எதிர்பார்க்கப்படுகிறது.

TN ASSEMBLY

தமிழக சட்டப்பேரவை கூட்டம்

தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்தின் போதும் ஆளுநர் உரையோடு தொடங்கும் இதனை தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் அடுத்தாக மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும். இந்த கூட்டங்களில் தமிழகத்தில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், புதிய திட்டங்கள், நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஆலோசிக்கப்படும்.

மேலும் எதிர்கட்சி உறுப்பினர்களின் கேள்வி மற்றும் கோரிக்கைகளுக்கு தமிழக அரசு விளக்கம் அளிக்கும். அந்த வகையில்  தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கடந்த ஜூன் மாதம் 20-ந் தேதி கூடியது. முதல் நாளில் மறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு அவை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டன.  
 

Tamil Nadu Assembly MK STALIN

6 மாதங்களுக்கு ஒரு முறை சட்டப்பேரவைக் கூட்டம்

இதனை தொடர்ந்து ஜூன்21-ந் தேதியில் இருந்து அரசுத் துறை மானியக் கோரிக்கைகள் மீது சட்டமன்ற உறுப்பினர்களின் விவாதம் நடத்தினர். இதற்கு அமைச்சர்கள் பதிலுரை வழங்கினார்கள்.  ஜூன் 29-ந் தேதிவரை 9 நாட்கள் காலையிலும், மாலையிலும் அவை கூடியது. இதனையடுத்து தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து  கடந்த ஜூன் 29-ந் தேதி சட்டபேரவை கூட்டம் முடிந்ததால் அடுத்த 6 மாதங்களுக்குள் மீண்டும் சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட வேண்டும்.

Tap to resize

CM MK STALIN

தமிழக சட்டப்பேரவை கூட்டம்:

அதாவது டிசம்பர் 28-ந் தேதிக்குள் மறுபடியும் சட்டசபை கூட்டப்பட வேண்டும் என்பது விதியாகும்.  அந்த வகையில் தற்போது தமிழக சட்டப்பேரவை கூட்டப்படவுள்ளது. காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக சட்டபேரவை சபாநாயகர் அப்பாவு வெளிநாட்டுக்கு சென்றிருந்தார்.  கடந்த 17-ந் தேதி சென்னை திரும்பினார். இந்த நிலையில் சட்டசபையை மீண்டும் கூட்டுவது பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

EPS STALIN

டிசம்பர் 9ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டம்

இதனையடுத்து டிசம்பர் 9 ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டம் தொடங்கப்பட இருப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது தொடர்பாக அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். அந்த வகையில் இந்த கூட்டமானது டிசம்பர் 10 மற்றும் 11-ந் தேதி வரை நடைபெறும் என எதிர்பாரக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை, அரசு ஊழியர்கள் கோரிக்கை, தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MK STALIN

மகளிர் உரிமை தொகை:

மேலும் மகளிர் உரிமை தொகை தொடர்பாக விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும் என துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்து வருகிறார். அந்த வகையில் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதியவர்களை இணைப்பது தொடர்பாகவும், மகளிர் உரிமை தொகை நிபந்தனைகளை தளர்த்துவது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos

click me!