Southern Railway: தென்மாவட்ட ரயில் பயணிகளுக்கு! தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

First Published | Oct 11, 2024, 10:08 AM IST

Southern Railway: திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ரயில் பாதை மின் தடம் மாற்றி அமைக்கும் பணி காரணமாக, திருச்செந்தூர் - நெல்லை, திருச்செந்தூர் - பாலக்காடு, பாலக்காடு - திருச்செந்தூர், திருநெல்வேலி - செங்கோட்டை ரயில்களின் போக்குவரத்தில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் ரயில் போக்குவரத்து முக்கிய பங்கு வகித்து வருகிறது. பொதுமக்கள் தொலைதூர பயணங்களுக்கு குறைவான கட்டணம், பாதுகாப்பான பயணம்,  அத்தியாவசிய வசதிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பேருந்தை விட ரயில் பயணத்தை அதிகம் பேர் விரும்புகின்றனர். இதனால் நாடு முழுவதும் தினமும் லட்சக்கணக்கான பொதுமக்கள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அவ்வப்போது தண்டவாளங்கள் பராமரிப்பு பணிகள், சிக்னல் பணிகள், மற்றும் மேம்பாட்டு பணிகள் உள்ளிட்ட காரணங்களுக்கான முக்கிய வழித்தடங்களில் அவ்வப்போது ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதும் பகுதியாக ரத்து செய்யப்பட்டு மாற்று வழித்தடத்தில் இயக்கப்படுவதும் வழக்கம். இது குறித்து  முன்கூட்டியே ரயில் பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படும். 

Tap to resize

இந்நிலையில் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ரயில் பாதை மின் தடம் மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி திருச்செந்தூரில் இருந்து மாலை 04.25 மணிக்கு புறப்படும் திருச்செந்தூர் - நெல்லை முன்பதிவு இல்லாத ரயில் அக்டோபர் 15ம் தேதி முதல் நவம்பர் 22ம் தேதி வரை திங்கட்கிழமைகள் மற்றும் தீபாவளி நாள் தவிர மற்ற நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

திருச்செந்தூர் - பாலக்காடு முன்பதிவு இல்லாத ரயில் அக்டோபர் 15ம் தேதி முதல் நவம்பர் 22 வரை (அக்டோபர் 31) திங்கட்கிழமைகள் மற்றும் தீபாவளி நாள் தவிர மற்ற நாட்களில் திருச்செந்தூரில் இருந்து மதியம் 12.20 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 1.45 மணிக்கு காலதாமதமாக புறப்படும். அதேபோல் பாலக்காடு - திருச்செந்தூர் முன்பதி இல்லாத ரயில் அக்டோபர் 15ம் தேதி முதல் நவம்பர் 22ம் தேதி வரை (அக்டோபர் 31) திங்கட்கிழமைகள் மற்றும் தீபாவளி நாள் தவிர மற்ற நாட்களில் தாழையூத்து - திருச்செந்தூர் ரயில் நிலையங்களுக்கிடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

திருநெல்வேலி - செங்கோட்டை பாசஞ்சர் ரயில் அக்டோபர் 15, நவம்பர் 17, 20, 21, 22ம் தேதி திருநெல்வேலியில் இருந்து மதியம் 1.50 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 40 நிமிடங்கள் தாமதமாக மதியம் 2:30 மணிக்கு புறப்படும்.

Latest Videos

click me!