AIADMK To TVK: தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்றதில் இருந்து பல்வேறு கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் தவெகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று 6 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைகின்றனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளரை இபிஎஸ் எந்த நேரத்தில் விலைக்கு வாங்கினோரோ என்னமோ அன்று முதல் செம கடுப்பில் இருந்த வந்த தவெக தலைவர் விஜய் அதிமுக முன்னாள், இந்நாள் எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களை சொல்லி சொல்லி தட்டிதூக்கி வருகிறார்.
26
108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக
நடந்து முடிந்து சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் தவெக வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் ஆட்சி அமைக்க தேவையான பெருபான்மையான 118 இடங்கள் அந்த கட்சிக்கு கிடைக்கவில்லை. இதனையடுத்து திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவை தவெக கோரியது. பின்னர் 10 ஆண்டுகளான கூட்டணியில் இருந்து வந்த காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெக ஆதரவு அளித்தது. மேலும், அமைச்சரவையில் இரண்டு அமைச்சர்களையும், தற்போது மாநிலங்களவையில் ஒரு எம்.பி.யையும் வழங்கப்பட்டுள்ளது.
36
நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு
இதேபோல், விசிகவும், ஐ.யு.எம்.எல். ஆகியவை முதலில் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக கூறியதை அடுத்து பின்னர் தவெக அமைச்சரவையில் இணைந்தது. மேலும் சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகியை நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி வருகிறது. அதேபோல் நம்பிக்கை வாக்கெடுப்பில் அமமுக ஒரு வெற்றி பெற்ற மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ், அதிமுகவின் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான 25 எம்.எல்.ஏ.க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்து எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.
இதனிடையே யாரும் எதிர்பாராத விதமாக மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய 4 தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதனையடுத்து எஸ்.பி. வேலுமணி தலைமையில் சில எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமை ஏற்று ஐக்கியமாகினர்.
56
அதிருப்தியில் சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர்
ஆனால், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், சி.வி. சண்முகம் இபிஎஸ்-ஐ சந்திக்கவில்லை. இதனால் இவர்கள் தவெகவில் இணைய உள்ளதாகவும், இதுதொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது.
66
அதிமுக முன்னாள் அமைச்சர் 6 பேர் தவெகவில்
இதனிடையே யாரும் எதிர்பாராத விதமாக அதிமுக முன்னாள் அமைச்சர் 6 பேர் இன்று தவெகவில் இணைய உள்ளதாக அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமியில் கட்சியில் இருந்து பதவிகள் பறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களான உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன், எம்.சி. சம்பத், கடம்பூர் ராஜு, பெஞ்ஜமின், எம்எஸ்எம் ஆனந்தன் ஆகியோர் இன்று பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் வைத்து அக்கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் பாப்பிரெட்டிபட்டி முன்னாள் எம்எல்ஏ கோவிந்தசாமி உள்ளிட்ட 11 முன்னாள் எம்எல்ஏ உறுப்பினர்கள் உட்பட 400 பேர் தவெகவில் இணைய இருப்பதாகவும் கூறப்படுகிறது.