தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு 3 மாதங்களே இருக்கும் நிலையில், திமுக, அதிமுகவுக்கு மாற்றாக பார்க்கப்படும் நடிகர் விஜய்யின் தவெக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. ஒருபக்கம் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை, மறுபக்கம் ஜனநாயகன் ரீலீஸ் ஆகாமல் முடங்கி கிடப்பது என விஜய்யை சுற்றி பிரச்சனைகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த் மோதலா?
இது போதாதென்று தவெகவில் உட்கட்சி பூசல் எழுந்துள்ளது விஜய்க்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த 50 ஆண்டு காலம் அரசியலில் அனுபவம் வாயந்த செங்கோட்டையனுக்கும், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், புஸ்ஸி ஆனந்த் மதிக்காததால் செங்கோட்டையன் தவெகவில் இருந்து விலக உள்ளதாகவும் தகவல் வெளியானது.