இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய செல்வபெருந்தகை, ''தேசிய ஜனநாயக கூட்டணி இயற்கைக்கு முரணான கூட்டணி. தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி. ஒருபோதும் தமிழக மக்கள் அந்த கூட்டணியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அந்த கூட்டணியில் இணைந்துள்ள அமமுக தலைவர் நேற்று வரை துரோகி என்றும் உலகத்தில் துரோகிக்கு ஒரு பட்டம் கொடுக்க வேண்டுமானால் அவருக்கு கொடுக்கலாம் என பேசியிருக்கிறார்.
பிரதமர் மோடி 100 முறை வந்தாலும் பயன் இல்லை
இனி எப்படி அவரோடு களம் காணப்போகிறார்? அவரோடு மேடையேற போகிறார்? வாக்கு கேட்க போகிறார்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்தவுடன் அவருடைய பெயரை சொல்வதற்கே தவிர்க்கிறார்.
ஆகவே இந்த கூட்டணி தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி. மோடி ஒருமுறை அல்ல; 100 முறை வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.