பிரதமர் மோடி 23ம் தேதி (நாளை மறுநாள்) தமிழகம் வருவதற்குள் அமமுக, தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வந்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த பாஜகவுக்கு, டிடிவி இணைந்தது மூலம் ஒரு மிஷன் சக்சஸ் ஆகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாஜக, அதிமுக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்று மீண்டும் இணைந்துள்ளார்.
இபிஎஸ் இருக்கும் பக்கமே தலை வைத்து படுக்க மாட்டேன் என சத்தியம் செய்யாத குறையாக சொன்ன டிடிவி, இப்போது பழைய கசப்புகளை மறந்து விட்டு அதிமுக கூட்டணியில் ஐக்கியமாகியுள்ளார்.
24
பாஜகவுக்கு ஒரு மிஷன் சக்சஸ்
இபிஎஸ்க்கும், எங்களுக்கும் இருப்பது பங்காளி சண்டை தான். ஆனால் இதை மறந்து விட்டு தமிழக மக்களின் நலனுக்காக கைகோர்த்துள்ளோம் என்று டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.
பிரதமர் மோடி 23ம் தேதி (நாளை மறுநாள்) தமிழகம் வருவதற்குள் அமமுக, தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வந்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த பாஜகவுக்கு, டிடிவி இணைந்தது மூலம் ஒரு மிஷன் சக்சஸ் ஆகியுள்ளது.
34
தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு என்ன?
ஆனால் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்னும் பிடி கொடுக்காமல் உள்ளார். டிடிவி பாஜகவுடன் கூட்டணி வைத்த நிலையில், தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு என்ன? என பிரேமலதாவிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த பிரேமலதா, ''தேமுதிக யாருடன் கூட்டணி? என்பதை உரிய நேரத்தில் அறிவிப்போம். இப்போது அது குறித்து சொல்ல அவசியமில்லை. எங்களுடன் பாஜக பேச்சுவார்தை நடத்தவில்லை. கூட்டணி தொடர்பாக தொலைபேசியிலும் பேசவில்லை.
பியூஸ் கோயல் சென்னை வருகிறார் என செய்திகளில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். கூட்டணி குறித்து உங்களை (செய்தியாளர்கள்) அழைத்து தான் முதலில் தெரிவிப்பேன்'' என்றார்.
நாளை மறுதினம் பிரதமர் மோடி வரும் நிலையில், பிரேமலதா பிடி கொடுக்காமல் பேசியிருப்பது பாஜகவுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
தேமுதிக திமுகவுடன் கூட்டணி வைக்க பிரேமலதாவும், கட்சியின் நிர்வாகிகள் விரும்புவதாகவும், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய விஜய் பிரபாகரன் விரும்புவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதனால் தான் கூட்டணி குறித்து தெளிவான முடிவை எடுக்க முடியாமல் பிரேமலதா தள்ளிப்போட்டு வருவதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.