இபிஎஸ்-க்கு நெஞ்சார்ந்த நன்றி.. ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம்.. பாச மழை பொழிந்த டிடிவி தினகரன்!

Published : Jan 21, 2026, 02:23 PM IST

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தபிறகு செய்தியாளர்களை சந்திப்பில் பேசிய டிடிவி தினகரன், அதிமுக பெயரையும், இபிஎஸ் பெயரையும் கூறாமல் பட்டும் படாமல் தான் பேசினார். இதனால் இந்த கூட்டணி நிலைக்குமா? என பலரும் சமூகவலைத்தளத்தில் கேள்வி எழுப்பினார்கள்.

PREV
13
தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன்

அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய மாட்டேன் என்று சொல்லி வந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (ஜனவரி 21) மீண்டும் என்டிஏ கூட்டணியில் இணைந்தார். பாஜக எடுத்த தொடர் முயற்சியால் இபிஎஸ் உடனான கசப்புகளை மறந்து விட்டு டிடிவி மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கியமாகியுள்ளார்.

முதலில் இபிஎஸ், அதிமுக பெயரை சொல்லாத டிடிவி

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தபிறகு செய்தியாளர்களை சந்திப்பில் பேசிய டிடிவி தினகரன், அதிமுக பெயரையும், இபிஎஸ் பெயரையும் கூறாமல் பட்டும் படாமல் தான் பேசினார். இதனால் இந்த கூட்டணி நிலைக்குமா? என பலரும் சமூகவலைத்தளத்தில் கேள்வி எழுப்பினார்கள்.

23
டிடிவியை வரவேற்ற இபிஎஸ்

ஆனால் இந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்த எடப்பாடி பழனிசாமி, ''தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அமமுக பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களை காப்போம். தமிழகத்தை மீட்போம்'' என்று கூறியிருந்தார்.

33
எடப்பாடி பழனிசாமிக்கு நெஞ்சார்ந்த நன்றி

தன்னை வரவேற்று வாழ்த்திய எடப்பாடி பழனிசாமிக்கு டிடிவி தினகரன் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட டிடிவி தினகரன், ''மக்கள் நலனை மையமாகக் கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மனதார வரவேற்று வாழ்த்திய அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒருங்கிணைந்து களப்பணியாற்றிடுவோம்

தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் தமிழகத்தில் மீண்டும் அமைத்திட நாம் அனைவரும் ஒருங்கிணைந்து களப்பணியாற்றிடுவோம். 

கடந்த நான்கரை ஆண்டுகளாக இருளில் மூழ்கியிருக்கும் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் புதிய வெளிச்சத்தை பாய்ச்சிடும் சரித்திரமிக்க வெற்றியைப் படைத்திடுவோம்'' என்று தெரிவித்துள்ளார். பாம்பும், கீரியுமாக இருந்த டிடிவி, இபிஎஸ் மீண்டும் இணைந்துள்ளது அதிமுக, அமமுகவினரை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories