நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் சீமான்.. நடிகை குறித்து தொடர்ந்து அவதூறாக பேசிய வழக்கில் அதிரடி

Published : Oct 08, 2025, 01:02 PM IST

நடிகை விஜயலட்சுமிக்கு எதிராக தான் தெரிவித்த அனைத்து கருத்துகளையும் திரும்பப் பெறுவதாக குறிப்பிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த விவகாரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார். 

PREV
14
சீமான் மீதான புகார்

தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏமாற்றிவிட்டதாகக் கூறி நடிகை விஜயலட்சுமி புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். நடிகை தொடர்ந்த பாலியல் புகார் தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

24
கண்டிப்பு காட்டிய நீதிமன்றம்

வழக்கு தொடர்பான விசாரணையில் கருத்து தெரிவித்த நீதிமன்றம், “நடிகையை அவதூறாக பேசிய விவகாரத்தில் சீமான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். அப்படி இல்லையென்றால் கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தது. மேலும் இருவரும் குற்றச்சாட்டுகளை திரும்ப பெற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். நடிகையை இனி தொந்தரவு செய்ய மாட்டேன் என சீமான் உறுதி அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

34
நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய சீமான்

இதன் அடிப்படையில் நடிகை தொடர்பாக அவதூறாக பேசிய வழக்கில் சீமான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக சீமான் தரப்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. பிரமாணப்பத்திரத்தில் தனது செல், செயல்களால் நடிகைக்கு ஏற்பட்ட வலி மற்றும் காயத்திற்கு நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நடிகைக்கு எதிராக தான் கூறிய அனைத்து அறிக்கைகள், குற்றச்சாட்டுகளையும் திரும்பப் பெறுவதாகவும், நடிகை குறித்து எந்த ஊடகத்திலும் எந்த கருத்தும் தெரிவி்க்க மாட்டேன் என்றும் உறதி அளித்தார்.

44
வழக்கை ரத்து செய்த உச்சநீதிமன்றம்

இதனைத் தொடர்ந்து சீமானுக்க எதிரான புகாரைத் திரும்பப் பெறவதாக நடிகைக் கூறியதைத் தொடர்ந்து வழக்க ரத்து செய்யப்பட்டது. மேலும் இரு தரப்பும் பரஸ்பரம் எந்தவொரு குற்றச்சாட்டையோ அல்லது அவதூறையோ பரப்பக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories