நடிகர் விஜய்யை சீமான் மீண்டும் சாடி உள்ளார். பணக்கொழுப்பு காரணமாகவே பிரசாந்த் கிஷோரை சந்தித்ததாக விமர்சித்துள்ளார். மக்களை நம்பி தேர்தலில் போட்டியிடுவதாகவும், இயக்கங்களை நம்பி அல்ல எனவும் சீமான் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்க்கு 'பண கொழுப்பு' ! தேர்தல் கூட்டணிக்கு எண்டு கார்டு போட்ட சீமான்
தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு எதிராக அரசியல் களத்தில் சுற்றி வருபவர் சீமான். இவரது பேச்சுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் பல லட்சம் இளைஞர்கள் நாம் தமிழர் கட்சியில் தொண்டர்களாக உள்ளனர். இதனால் ஒவ்வொரு தேர்தலிலும் திமுக- அதிமுகவிற்கு எதிராக போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்று வருகிறார். இதன் காரணமாக தேர்தல் ஆணையமும் அங்கீகாரம் அளித்துள்ளது.
24
சீமான் - விஜய் கூட்டணி.?
இதனிடையே 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யுடன் சீமானின் நாம் தமிழர் கட்சி கூட்டணி வைக்கும் என பேசப்பட்டது. இதற்கு வலு சேர்க்கும் வகையில் சீமானும் தம்பி, தம்பி என விஜய்யை அன்போடு அழைத்து வந்தார். இந்த சூழ்நிலையில் தான் தவெக மாநில மாநாட்டில் சீமானை மறைமுகமாக விமர்சித்து விஜய் பேசியிருந்தார். இதனால் அதிருப்தி அடைந்த சீமான், விஜய்க்கும் தனக்கும் ஒத்துவராது என தெரிவித்து என் வழி தனி வழி என அறிவித்தார்.
34
சீமான் மீது வழக்கு- நீதிமன்றத்தில் ஆஜர்
இந்த நிலையில் விஜய்யை தொடர்ந்து விமர்சித்து வரும் சீமான். இன்று விஜய்க்கு பண கொழுப்பு என சீமான் கூறி விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கடந்த 2022 ம் ஆண்டு நாம் தமிழ் கட்சி சார்பாக நடைபெற்ற ராஜேந்திர சோழன் பிறந்த நாள் பெருவிழாவில் சீமான் இன உணர்வுகளை தூண்டும் வகையில் அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்காக செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார். அப்போது விசாரணைக்கு பிறகு இந்த வழக்கை அடுத்த மாதம் நீதிபதி ஒத்திவைத்தார்.
44
விஜய்க்கு பண கொழுப்பு
நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த சீமான் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது தவெக தலைவரும் நடிகருமான விஜய் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் உடன் சந்தித்தது குறித்த கேள்வி எழுப்பியதற்கு பண கொழுப்பு காரணமாக சந்தித்ததாக சீமான் விமர்சித்தார்.
யாருடன் கூட்டணி என்ற கேள்விக்கு பிரச்சனையோடு, கண்ணீரோடு, கவலையோடு நிற்கின்ற எல்லா மக்களோடும் கூட்டணி வைத்து தான் போட்டியிடுகிறேன் என கூறினார். தனித்துப் போட்டியிடவில்லை தமிழர்களை நம்பி தான் போட்டி , இயக்கங்களை நம்பி அல்ல என சீமான் கூறினார்