திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடமுழுக்கு விழா சமீபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிலையில், பவுர்ணமியை முன்னிட்டு கடல் நீர் உள்வாங்கியதால் பக்தர்கள் பரவசமடைந்தனர்.
தமிழ் கடவுளாகவும், அழகின் அம்சமாக போற்றி வணங்கப்படுபவர் முருகப்பெருமான். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா ஜுலை 7ம் தேதி வெகு விமர்சியாக நடைபெற்றது. அரோகரா விண்ணை பிளக்கும் கோஷத்துடன் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
25
குடமுழுக்கு விழா
குடமுழுக்கு விழா சமஸ்கிருதம் மட்டுமின்றி தமிழிலும் நடத்தப்பட்டது. தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வரவேற்பு அளித்தனர். ராஜகோபுரத்தின் மீது ஊற்றப்பட்ட புனித நீர் ட்ரோன்கள் மூலமாக கோயிலைச் சுற்றியும் இருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
35
30 நாட்கள் மட்டுமே மண்டல பூஜை
அனைத்து கோவில்களிலும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்ற பின்னர் 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும். ஆனால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து 31-வது நாள் ஆவணி திருவிழா ஆரம்பமாக உள்ளதால், 30 நாட்கள் மட்டுமே மண்டல பூஜை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று பவுர்ணமி தொடங்க உள்ள நிலையில் இதனை முன்னிட்டு திருச்செந்தூரில் கோவில் கடற்கரை பகுதியில் உள்ள செல்வதீர்த்தம் பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு சுமார் 100 அடி தூரம் கடல் நீர் திடீரென உள்வாங்கியது. இதனால் பாசி படர்ந்த பச்சை நிற பாறைகள் அதிக அளவில் வெளியே தென்ப்பட்டன. மேலும் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் பாறைகள் மீது ஆபத்தை உணராமல் நின்று செல்பி எடுத்தும், புகைப்படம் எடுத்து கொண்டனர்.
55
திருச்செந்தூர்
ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள் மற்றும் அதற்கு முந்திய, பிந்திய நாட்களில் கடல்நீர் உள்வாங்குவதும், பின்னர் இயல்புநிலைக்கு திரும்புவதும் வழக்கமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.