நாய் கடித்து எம்பிஏ பட்டதாரி இளைஞர் உயிரிழப்பு! ரேபிஸ் நோய் எப்படி ஏற்படுகிறது தெரியுமா?

Published : Jul 10, 2025, 10:44 AM IST

நாய் கடித்தால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் தடுப்பூசியின் அவசியம் குறித்து இந்த கட்டுரை விளக்குகிறது. 72 மணி நேரத்திற்குள் தடுப்பூசி போடுவது ஏன் முக்கியம் என்பதையும், தாமதமானால் ஏற்படும் விளைவுகளையும் கூறுகிறது.

PREV
15
ரேபிஸ் நோய் தாக்கி கபடி வீரர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் மாவட்டத்தில் மாநில அளவிலான சாக்கடையில் தத்தளித்துக் கொண்டிருந்த நாய்க்குட்டி ஒன்றை காப்பாற்றியபோது அது கடித்துள்ளது. அந்த நாய்க்குட்டி கடித்ததை சோலங்கி பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தடுப்பூசியும் போடாமல் அலட்சியமாக இருந்துள்ளார். இந்நிலையில் ரேபிஸ் நோய் தாக்கி கபடி வீரர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள் தமிழகத்தில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

25
எம்பிஏ பட்டதாரியை நாய் கடித்தது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள தின்னூர் கிராமத்தை சேர்ந்தவர் எட்வின் பிரியன்(23). எம்பிஏ பட்டதாரியான இவர் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார். இவரை கடந்த சில நாட்களுக்கு முன் நாய் கடித்துள்ளது. வீட்டில் யாரிடமும் கூறாமலும், அதற்கான சிகிச்சை ஏதும் எடுத்துக்கொள்ளாமலும் அலட்சியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் திடீரென அவருக்கு உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு எச்சில் துப்புவதும் சத்தம் போட்டு அலறியபடியும் இருந்துள்ளார்.

35
ரேபிஸ் பாதிப்பால் இளைஞர் பலி

இதனையடுத்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அப்பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். பரிசோதனையில் அவரை நாய் கடித்தது தெரியவந்துள்ளது. அதனைத்தொடர்ந்து அவருக்கு தளி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று நாய்க்கடி ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். ரேபிஸ் தாக்கி பட்டதாரி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

45
ரேபிஸ் எப்படி பரவுகிறது?

ரேபிஸ் வைரஸால் பாதிக்கப்பட்ட நாய் ஒருவரை கடித்து விட்டால் அவர் கட்டாயம் 72 மணி நேரத்திற்குள் தடுப்பூசி போட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.  72 மணி நேரம் என்பது 3 நாட்கள். தடுப்பூசி போட்டாலும் antibodies சுமார் 7 நாட்கள் கழித்து தான் உருவாகி வைரஸை எதிர்த்து போராடும். ஆக, 3+7 = 10 நாட்கள். இந்த 10 நாட்கள் வரை antibodies உடலில் உருவாகவில்லை என அர்த்தம். இந்த 10 நாட்களுக்குள் வைரஸ் கடிப்பட்டவரின் நரம்புக்குள் நுழைந்து விட்டால், பின்னர் அதனை தடுக்க முடியாது. அவை மூளைக்கு நிச்சயம் சென்று விடும். மரணம் நிச்சயம்.

55
ரேபிஸ் பரவாமல் தடுப்பது எப்படி?

பொதுவாக, ஒருவரை கடித்தவுடன் நாயின் எச்சில் வழியாக வைரஸ் தசைக்குள் செல்லும். பின்னர், சில நாட்கள் முதல் ஒரு மாதம் வரைக் கூட நரம்புக்குள் நுழையாமல் தசையிலேயே தன்னைப் போல் பல ஆயிரம் வைரஸ்களை உற்பத்தி செய்யும்(Replication).இந்த செயலுக்கு பின்னர் தான் அவை அருகில் இருக்கும் நரம்புக்குள் நுழையும். இதற்கு சில நாட்கள் முதல் சில வாரங்கள் வரை ஆகும் என்பதால், 3 நாட்கள் கழித்த பின்னரும் தடுப்பூசி போடலாம் கூறுகிறார். ஆனால், எல்லாருக்கும் இப்படி நடக்காது. அரிதாக ஒரு சிலரை நாய் கடித்தவுடன், அந்த இடத்தில் நரம்புகள் அதிகமாக இருந்தால், replication உடனடியாக நடந்து, சீக்கிரமாகவே அவை நரம்புக்குள் நுழைந்து விடும். அதாவது, தடுப்பூசி போட்டும் antibodies உருவாவதற்கு முன்னரே வைரஸ்கள் நரம்புக்குள் நுழைய வாய்ப்புள்ளது. எனவே, 72 மணி நேரம் வரை காத்திருக்காமல் ஒரு மணி நேரத்திற்குள் அல்லது கடிப்பட்ட அந்த நாளுக்குள் தடுப்பூசி போட்டுக் கொண்டால் மிகவும் பாதுகாப்பானது.

Read more Photos on
click me!

Recommended Stories