TN Weather Update: நேற்று 11 இடங்களில் சதம் அடித்த வெயில்.. குளிர்விக்க வருமா மழை? லேட்டஸ்ட் ரிப்போர்ட்!

Published : Jul 07, 2026, 07:06 AM IST

Rain News: தமிழகத்தில் மழை குறித்து சென்னை வானிலை மையம் முக்கிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளது. இன்று அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்

PREV
16
தமிழகத்தில் 11 இடங்களில் வெயில் சதம் அடித்த

தமிழ்நாட்டில் நேற்று 11 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 105 டிகிரி வெயில் வாட்டி வதைத்தது. அதேபோல் நாகை, மதுரை விமான நிலையம், புதுச்சேரி, பரங்கிப்பேட்டை, மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், திருச்சி, திருத்தணி, மதுரை நகரம் ஆகிய இடங்களில் 100 டிகிரி அளவை தாண்டி வெயில் பதிவாகி இருந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் தமிழகத்தில் மழை குறித்து சென்னை வானிலை மையம் முக்கிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளது.

26
காற்றழுத்த தாழ்வு பாதை

அதாவது சராசரி கடல் மட்டத்தில் தெற்கு குஜராத்திலிருந்து வடக்கு கேரளா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஓடிசா-மேற்கு வங்காள கடலோர பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா கடலோர பகுதிகளை பாலசோர் பகுதிகளுக்கு அருகில் கரையை கடந்தது.

36
மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று

இதன் காரணமாக 08ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

46
லேசானது முதல் மிதமான மழை

அதேபோல் 09 முதல் 12ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

56
வெயில் குறித்து வார்னிங்

இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என கணித்துள்ளது.

66
சென்னை வானிலை மையம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories