இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள் செயல்படும்? பள்ளி மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

Published : Dec 06, 2025, 06:31 AM IST

வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, சென்னைஉள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகள் இன்று செயல்படும்.

PREV
14
இலங்கையை புரட்டி எடுத்த டிட்வா புயல்

வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக இலங்கையில் வரலாறு காணாத அளவில் பெருமழை பெய்தது. இதனால் இலங்கை பகுதிகள் முழுவதும் அதிக பாதிப்புகளை சந்திக்க நேர்ந்தது. மேலும் பொருள் சேதம், உயிர் சேதம் என இலங்கை நாட்டு மக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மேலும் புயலால் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் மாயமானதாக தகவல் வெளியானது.

24
சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை

இதனையடுத்து இலங்கையில் இருந்து டிட்வா புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்தது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் விடாமல் கனமழை பெய்ததால் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது. மேலும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

34
பள்ளிகளுக்கு முறை

இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை மாவட்டத்தில் கனமழை காரணமாக டிசம்பர் 2, 3, 4 என மொத்தம் 3 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக சனிக்கிழமைகளில் பள்ளிகளை இயங்க வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி டிசம்பர் 2ம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் விதமாக டிசம்பர் 6ம் தேதி சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் இயங்கும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்திருந்தார்.

44
இன்று பள்ளிகள் செயல்படும்

அதன்படி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் இன்று வழக்கம்போல் செயல்படும். அதன்படி புதன்கிழமை பாடவேளையை பின்பற்றி பள்ளிகள் முழு நேரம் செயல்படும் என்று அறிவித்துள்ளார். அதேபோல் திருவள்ளூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று பள்ளிகள் அனைத்து வகை மெட்ரிக் பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படும். Trust Exam (ஊரக திறனறித் தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகள் தவிர).

Read more Photos on
click me!

Recommended Stories