தனியாகத் தேர்தல்களைச் சந்தித்து வரும் நாம் தமிழர் கட்சி, வேட்பாளர்களை நிறுத்துவதிலும் பாலின சமத்துவத்தைப் பின்பற்றி வருகிறது. அதன்படி, மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 117 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களையும், 117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களையும் அறிவிப்பதை கொள்கையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான சில வேட்பாளர்களை கட்சியின் பொதுக்கூட்டங்கள் நடக்கும்போதே அறிவித்து வந்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தற்போது 100 பெயர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளார்.