தமிழகத்தில் விடுமுறை என்றாலே பள்ளி மாணவர்கள் முதல் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கொண்டாட்டம் தான். அதுவும் தொடர் விடுமுறை என்றால் சொல்லவே வேண்டாம். இந்நிலையில் தமிழகத்தில் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் பொதுத்தேர்வு மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் 24-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனையடுத்து ஏப்ரல் 25ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கியதை பள்ளி மாணவர்கள் குஷியில் இருந்தனர். மேலும் கோடை விடுமுறை என்றாலும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியது.
25
பள்ளிக்கல்வித்துறை
மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. ஆனால் கோடை வெயில் கடுமையான வாட்டி வதைத்து வந்தது. இதனால் பள்ளிகள் திறப்பு இரண்டாவது வாரம் தள்ளிப்போகலாம் என மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அரசியல் தலைவர்களும் பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இதனிடையே எப்போது ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த முறை மே மாதம் இறுதியில் தொடங்கியதால் நீலகிரி, கோவை, சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது மட்டுமல்லாமல் வெயிலின் தாக்கமும் குறைந்து காணப்பட்டது. அதுமட்டுமல்ல கத்திரி வெயில் தொடங்கியதில் முதலே தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது.
35
ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறப்பு
இதனால் திட்டமிட்டப்படி பள்ளிகள் ஜூன் 2ம் தேதி தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகஷே் அறிவிப்பை வௌியிட்டிருந்தார். அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளிகள் 2ம் தேதி திறக்கப்பட்டு பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்றனர். அவர்களுக்கு ஆசிரியர்கள் பூக்கொடுத்து கொடுத்து வரவேற்றனர். அன்றைய தினமே புத்தகங்கள் வழங்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஆனால் எப்போது பள்ளி திறக்கப்பட்டதோ அன்று முதல் பல்வேறு மாவட்டங்ககளில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்து வந்ததால் பள்ளிகள் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
என்னதான் மாதக்கணக்கில் விடுமுறை கொண்டாடினாலும் அடுத்த முறை எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களும் இருப்பது வழக்கம். அதுமட்டுமல்லாமல் அரசு விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை எப்போது வருகிறது என்பது தொடர்பாக பள்ளி மாணவர்கள் காலாண்டரை புரட்டி பார்த்து வருகின்றனர். ஆனால், ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் போதிய விடுமுறை இல்லாததால் மாணவர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.
55
3 நாட்கள் தொடர் விடுமுறை
அதாவது ஜூன் மாதம் 7ம் தேதி சனிக்கிழமை அன்று பக்ரீத் பண்டிகை வந்ததால் பள்ளி மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். வெள்ளிக்கிழமை அல்லது திங்கள்கிழமை வந்திருந்தால் தொடர்ந்து மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்திருக்கும். அதேபோல் ஜூலை மாதத்தில் அரசு விடுமுறை என்று பார்த்தால் மொஹரம் பண்டிகை மட்டுமே உள்ளது. அதுவும் இந்த பண்டிகை ஜூலை 6-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால் விடுமுறை வருவதால் மாணவர்கள் கவலையில் உள்ளனர். சில நேரங்களில் சந்திரனின் மொஹரம் பண்டிகை பிறை நமக்கு மறுநாள் தான் தென்படும். மறுநாள் தென்பட்டால் ஜூலை 7-ம் தேதி திங்கட்கிழமை விடுமுறை அளிக்க அதிக வாய்ப்புள்ளது. அப்படி விடுமுறை கிடைக்கும் பட்சத்தில் பள்ளிகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது. 2025-26 கல்வியாண்டில் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.