அரசு பள்ளிகளில் ஆண்டுவிழா
2024-25ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், கல்வி செயல்பாடுகள், மாணவர்களின் சிறப்பு அம்சங்கள், ஆசிரியரின் சிறப்பு செயல்பாடுகள், ஆகியவற்றை பெற்றோர்களுக்கு எடுத்துரைத்து பள்ளி ஆண்டுவிழா நடத்திட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உத்தரவின்படி ரூ.14 கோடியே 60 லட்சத்து 89 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன்
அதன்படி, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளிலும், ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் ஆண்டு விழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: இரண்டு நாட்கள் விடுமுறை! குஷியில் துள்ளி குதிக்கும் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
அதில், தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆண்டுவிழா சிறந்த முறையில் நடத்தப்படும். இதில் மாணவர்களின் கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற பல்வேறு திறன்களை பெற்றோர்கள் முன்னிலையில் வெளிக்காட்ட வாய்ப்பு ஏற்படுத்தப்படும். இதற்காக சுமார் ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரால் சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.
அரசியல் கட்சி துண்டுகள்
அதன்படி 2024-25-ம் கல்வியாண்டில் பள்ளி ஆண்டு விழா கொண்டாட மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு ரூ.15 கோடி நிதியை பகிர்ந்தளித்து விழாவுக்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே சோப்பனூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் திரைப்பட பாடலுக்கு 5 மாணவர்கள் நடனம் ஆடியுள்ளனர். அதில் ஒரு மாணவன் வீரப்பன் படம் பொறித்த டி-சர்ட்டை கையில் பிடித்துக் காட்டியதோடு, 2 மாணவர்கள் அரசியல் கட்சி துண்டுகளை அணிந்து நடனம் ஆடியதாகவும் புகார் மனு இயக்குநரகத்துக்கு வந்துள்ளது.
இதையும் படிங்க: ஆஹா! விடுமுறை தொடர்பான அறிவிப்பு வந்தாச்சு! பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் குஷி!
பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை
இதையடுத்து அரசுப் பள்ளிகளில் ஆண்டுவிழாவின் போது இத்தகைய திரைப்படப் பாடல்கள் ஒளிபரப்புவது, சாதி ரீதியான சின்னங்களை வைத்துக் கொள்வது போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும். மீறினால் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இந்த விவகாரத்தில் உரிய கவனத்துடன் செயல்பட வேண்டுமென அனைத்துப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் அறிவுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.