TASMAC Shops Holiday : நவீன காலத்திற்கு ஏற்ப மக்களும் மாறி வருகிறார்கள். மது குடித்தால் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த நிலை மாறி, மது குடிக்காதவர்களை தான் நண்பர்கள் கூட்டத்தில் இருந்து ஒதுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மது குடிப்பதை பேஷனாக மாற்றி விட்டார்கள். ஆண்களுக்கு இணையாக பெண்களின் கைகளிலும் மதுக்கோப்பைகள் காணப்படுகிறது.
அந்த அளவிற்கு மதுபான விற்பனையானது படு ஜோராக நடைபெறுகிறது. தமிழகத்தில் மதுபான விற்பனையை தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் மதுபான விற்பனையால் பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.
கோடிக்கணக்கில் கொட்டும் வருவாய்
சாதாரண நாட்களில் 100 கோடிக்கு விற்பனையாகும் மதுபானம், இதுவே தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற நாட்களில் 150 கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெறுகிறது. எனவே டாஸ்மாக் மூலம் வரும் வருமானத்தின் மூலம் தமிழக அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடிகிறது. எனவே தமிழகம் முழுவதும் 4ஆயிரம் மதுபானக்கடைகள் உள்ள நிலையில்,
கடைகளை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கையும் தீவிரம் அடைந்து வருகிறது. ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பதை தடுக்கவும், கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்வது தடுக்கவும் இந்த வழிமுறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்பதே கேள்வி குறிதான், தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் போன்ற விஷேச நாட்களில் கூட விடுமுறை விடப்படுவதில்லை. அந்த நாட்களில் தான் கூடுதல் மது விற்பனை நடைபெறுவதால் அந்த நாளில் தான் கூடுதல் வேலை இருக்கும்.
இருந்த போதும் டாஸ்மாக் கடைகளுக்கு தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட 8 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் நாட்களிலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
ஏப்ரல் 10ஆம் தேதி விடுமுறை
இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு தினம், மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி ஆகிய 8 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் மகாவீர் ஜெயந்தி வருகிற மார்ச் 10ஆம் தேதி வரவுள்ளதால் அன்றைய தினம் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.