தமிழக அரசு கல்விக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது மட்டுமல்லாமல் பல்வேறு முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மாணவர்களின் பசியை போக்கும் வகையில் காலை மற்றும் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனால் ஏழை எளிய மாணவர்கள் பயமடைந்து வருகின்றனர்.
அதில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்பட்டுவரும் அனைத்து வகையான அரசு, அரசு உதவிபெறும், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளை பல்வேறு நிலைகளில் ஊக்கப்படுத்தும் விதத்தில், 2024-2025-ஆம் கல்வியாண்டில், குறுவட்டம், வருவாய் மாவட்டம், மாநில மற்றும் இந்திய பள்ளிக் குழுமம் (SGFI) சார்பாக நடைபெறும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு மண்டல மற்றும் மாநில அளவில் தெரிவுப் போட்டிகள் நடத்திடவும், தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கு பெறவும், மேலும் இந்திய பள்ளிக் குழுமம் (SGFI) போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்திடவும் உரிய செலவினங்கள் மேற்கொள்ள ரூ.12,50,00,000/- நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.