TN Government Employees: ஒரே நேரத்தில் 3 சம்பளங்கள்! அரசு ஊழியர்களை திக்கு முக்காட வைக்கும் தமிழக அரசு!

Published : Oct 30, 2024, 04:52 PM ISTUpdated : Oct 30, 2024, 04:54 PM IST

TN Government Employees: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாத சம்பளம், போனஸ், அகவிலைப்படி உயர்வு மற்றும் முன்பணம் ஆகியவை இன்று வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளன.

PREV
18
TN Government Employees: ஒரே நேரத்தில் 3 சம்பளங்கள்! அரசு ஊழியர்களை திக்கு முக்காட வைக்கும் தமிழக அரசு!
Diwali Festival

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். அன்றை தினம் புதிய உடை அணிந்து குடும்பத்துடன் பட்டாசு வெடித்து உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர். 

28
Tamilnadu Government Employees

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரசு ஊழியர்களுக்கு போனஸ் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

38
Four Days Holiday

அதாவது தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை அரசு விடுமுறை. இடையில் நவம்பர் 1ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.  2ம் தேதி சனிக்கிழமையும், 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் வார விடுமுறையாகிவிடுகிறது. இதனால் மொத்தம் 4 நாட்கள் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை கிடைக்கிறது. 

48
Monthly Salary

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டதை அடுத்து அக்டோபர் மாதத்திற்கான சம்பளம் இன்றே அவரவர் வங்கி கணக்கில் அரசு செலுத்தியுள்ளது.

58
DA Hike

அதேபோல் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி  50%ஆக இருந்த நிலையில் தற்போது 53% உயர்ந்துள்ளது. இதனால்,  ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான நிலுவைத் தொகை சேர்த்து அக்டோபர் மாதம் சம்பளத்துடன் சேர்ந்து வரவு வைக்கப்பட்டது.

68
Diwali Bonus

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மற்றொரு இன்ப அதிர்ச்சியும் காத்து இருக்கிறது. அதாவது அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு போனஸ் அக்டோபர் மாதம் சம்பளத்துடன் சேர்ந்து வரும். 

78
Advance payment for Diwali festival

மேலும் அரசு துறைகளில் பணிபுரிபவர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கான முன்பணம் தொடர்பாக விண்ணப்பித்திருந்தவர்களுக்கு இந்த மாதம் சம்பளத்துடன் சேர்ந்து வந்துடும்.

88
Government Employees

தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளம், போனஸ், அகவிலைப்படி உயர்வு, முன்பணம் ஆகியவை அனைத்தும் ஒரே நேரத்தில் வங்கி வரவு வைக்கப்பட்டதை அடுத்து ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Read more Photos on
click me!

Recommended Stories