Special Train: நாளை தீபாவளி பண்டிகை! சொந்த ஊர் செல்லும் பொதுமக்களுக்க ரயில்வே துறை வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!

First Published Oct 30, 2024, 6:09 PM IST

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து திருச்சி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். சென்னை எழும்பூர், தாம்பரம், சென்னை சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து இந்த ரயில்கள் இயக்கப்படும்.

தீபாவளி பண்டிகையை கொண்டாட தலைநகர் சென்னையில் இருந்து வேலை செய்யும் பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால், கடந்த 2 நாட்களாக பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், தீபாவளியை ஒட்டி சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக சென்னையில் இருந்து திருச்சி மற்றும் போத்தனூருக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இன்று இரவு இயக்கப்பட உள்ளன. 

இதையும் படிங்க: TN Government Employees: ஒரே நேரத்தில் 3 சம்பளங்கள்! அரசு ஊழியர்களை திக்கு முக்காட வைக்கும் தமிழக அரசு!

Latest Videos


Train

சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9.10 மணிக்கு முன்பதிவில்லாத சிறப்பு இயக்கப்படுகிறது. 8 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக அதிகாலை 5.45 மணிக்கு திருச்சியை சென்றடையும். இதே ரயில் மறுமார்க்கத்தில் அக்டோபர் 31ம் தேதி பகல் 12 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும் ரயில் இரவு 8.45க்கு தாம்பரம் வந்தடையும்.

தாம்பரத்தில் இருந்து இரவு 12.30 மணிக்கு முன்பதிவில்லாத சிறப்பு இயக்கப்படுகிறது. 12  பெட்டிகள் கொண்ட இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், லால்குடி, ஸ்ரீரங்கம், திருச்சி காலை 6.30 மணிக்கு  சென்றடையும். மறுமார்க்கத்தில் அக்டோபர் பகல் 9.30 மணிக்கு புறப்படும் ரயில் அன்று இரவு 8.15க்கு தாம்பரம் வந்தடையும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று இரவு 10.10 மணிக்கு முன்பதிவில்லாத சிறப்பு இயக்கப்படுகிறது. இந்த ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், சோளிங்கர், வாலாஜ ரோட், காட்பாடி, சமல்பட்டி, மோரப்பூர், பொம்மிடி, சேலம், திருப்பூர் வழியாக கோவை போத்தனூக்கு வியாழக்கிழமை 7 மணிக்கு  சென்றடையும். இதே ரயில் மறுமார்க்கத்தில் இருந்து நவம்பர் 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.45 மணிக்கு போத்தனூரிலிருந்து கிளம்பி அன்று மாலை 4.50 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் 18 பெட்டிகளை கொண்டது. இதில், 16 இரண்டாம் வகுப்பு பெட்டிகளும், 2 திவ்யாங்ஜன் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. 

click me!