ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான நாகேந்திரன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அவரது மகன் அசுவத்தாமனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால், பழிக்குப் பழி கொலை நடக்கலாம்.
பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். வேலூர் சிறையில் இருந்தே நாகேந்திரன் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு கொடுத்து மகன் அசுவத்தாமன் மூலம் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகேந்திரன் ஏ1 குற்றவாளியாகவும், ஏ2 குற்றவாளியாக அவரது மகன் அஸ்வந்தாமன் மற்றும் பொன்னை பாலு உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடிகள் வழக்கறிஞர்கள் என சுமார் 30 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
25
கல்லீரல் பாதிப்பால் நாகேந்திரன் உயிரிழப்பு
இந்நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகேந்திரனுக்கு கல்லீரல் பாதிப்பால் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெறவிருக்கும் நிலையில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
35
நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன்
இதனிடையே சிறையில் இருக்கும் நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்துள்ளார். அதில் தந்தை நாகேந்திரனின் உடலுக்கு இறுதி சடங்கு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என அசுவத்தாமன் கோரிக்கை விடுத்துள்ளார. முறையீட்டை கேட்ட நீதிபதி, செம்பியம் காவல்துறை உதவி ஆணையாளர் மற்றும் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் நேரில் ஆஜராகி பதிலளிக்க உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்க அசுவத்தாமனுக்கு திங்கள் வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அசுவத்தாமனின் ரத்த சொந்தங்கள் இருவர் பிணை வழங்கி கையெழுத்திட்ட பின்னர் இடைக்கால ஜாமீனில் விடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இறுதி சடங்கு முடிந்த பின்னர் திங்கள்கிழமை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அசுவத்தாமனை ஆஜர்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
55
ஆம்ஸ்ட்ராங் குரூப்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியான நாகேந்திரன் உயிரிழந்ததை அடுத்து ஏ2 குற்றவாளியான அசுவத்தாமன் ஜாமீனில் வெளியே வரும் நிலையில் அவரை பழிக்கு பழி வாங்க ஆம்ஸ்ட்ராங் தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நாகேந்திரன் வீடு அமைந்துள்ள வியாசர்பாடி முல்லை நகர் அருகே 250க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சட்டம் ஓழுங்கை சீர்குலைக்கும் வகையில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.