இதனிடையே, தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் தொடர்ந்த வழக்குகளின் அடிப்படையில், மாநில ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு சட்டமன்றத்தால் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலநிர்ணயம் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தச் சூழலில், அண்மையில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரில் மொத்தம் 18 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இவற்றில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை உயர்த்துவது உள்ளிட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த மாத இறுதியில் ஒப்புதல் அளித்திருந்தார்.