மீண்டும் அதிமுகவில் சேருகிறாரா வைத்திலிங்கம்? ஹாஸ்பிடலில் எனக்கு சிகிச்சையா?அவரே சொன்ன பரபரப்பு தகவல்

Published : Nov 13, 2025, 03:47 PM IST

ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்ததை தொடர்ந்து, வைத்திலிங்கம் அதிமுகவில் இணைவதாக செய்திகள் பரவின. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இந்த வதந்திகள் என விளக்கம்.

PREV
13

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து அதிர்ச்சி கொடுத்தார். இதனையடுத்து ஓபிஎஸ் தீவிர ஆதரவாளரான டெல்டாவை சேர்ந்தவரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் முதலில் திமுக இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகின. பின்னர் அதிமுகவில் வைத்திலிங்கத்தை இணைக்க ரகசிய பேச்சு வார்த்தை நடைபெற்றதாகவும், அவருக்கு அதிமுகவில் துணை பொதுச்செயலாளர் பதவி வழங்குவதாக இபிஎஸ் தரப்பில் பேச்சு வார்த்தை நடைபெற்று உடன்பாடு எட்டப்பட்டதாக கூறப்பட்டது.

23

இந்நிலையில், சில நாட்களுக்கு முன் திடீரென வைத்திலிங்கத்திற்கு மூளையில் ஏற்பட்ட சிறு அடைப்பு காரணமாக, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் நலம் பெற்று திரும்பியதும், அதிமுகவில் இணைவார் உள்ளதாக பிரபல நாளிதழில் செய்திகள் வெளியான நிலையில் இதனை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

33

Read more Photos on
click me!

Recommended Stories