மகளிர் உரிமைத் தொகை அதிகரிக்கப்படுகிறதா? வெளியாகும் முக்கிய அறிவிப்பு! முழு விவரம்!
தமிழ்நாடு அரசு 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டம் என்ற பெயரில் குடும்ப அட்டை வைத்துள்ள, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கி வருகிறது. இந்த 1,000 ரூபாய் தகுதியான பெண்களுக்கு அவர்களின் வங்கி கணக்கில் மாதம்தோறும் செலுத்தப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் வரையிலான நிலவரப்படி 1 கோடியே 14 லட்சம் பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்காக ஏராளமான பெண்கள் புதிதாக விண்ணப்பித்து வருகின்றனர். அந்த விண்ணப்பங்களை தமிழ்நாடு அரசு பரிசீலித்து வரும் நிலையில், அடுத்த வராம் மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
24
மகளிர் உரிமைத் தொகை
அதாவது புதிய ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. புதிதாக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு 3 மாதத்தில் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஏற்கெனவே கூறியிருந்தார். அதன் அடிப்படையில் மகளிர் உரிமை தொகைக்கு வந்து சேர்ந்துள்ள புதிய விண்ணப்பங்கள் ஏற்கப்படும், ஆவணங்கள் சரிபார்க்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படலாம் என்று அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இது குறித்து பேசிய அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், ''மகளிர் உரிமை தொகையை விரிவுபடுத்துவதில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது. தகுதியான அனைத்து பெண்களின் விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படும்'' என்றார். அதே வேளையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் "மகளிர் உரிமை தொகை" நீட்டிக்கப்படும் என்ற பரவும் செய்திகளில் உண்மை இல்லை எனவும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.
ஓய்வூதியம் பெறும் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவதில்லை. ஆனால் ஓய்வூதியம் பெறும்ம் அனைத்து பெண்களுக்கும் வசதியாக இல்லை. சொற்பமாக வரும் ஓய்வூதியத்தை வைத்துக் கொண்டு சொந்த வீடு கூட இல்லாத பெண்கள் ஏராளம் உள்ளனர். ஆகையால் ஓய்வூதியம் வாங்கினாலும் வீடு இல்லாதவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
44
மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம்
இது குறித்து அரசு பரிசீலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகையின் அளவு அதிகரிக்கப்படும் எனவும் தகவல்கள் அடிபடுகின்றன. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்படுமா? என்பது அடுத்த வாரம் தெரிந்து விடும்.