பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தலனா! 2026 தேர்தலில்! திமுகவுக்கு கூட்டணி கட்சி எச்சரிக்கை!

Published : Feb 11, 2025, 11:48 AM ISTUpdated : Feb 11, 2025, 11:53 AM IST

தேர்தல் வாக்குறுதியായ பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றாததால் திமுக அரசு மீது ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர். 2026 தேர்தலில் மாற்று முடிவை எடுப்பார்கள் என திமுக கூட்டணி கட்சி தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

PREV
15
பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தலனா! 2026 தேர்தலில்! திமுகவுக்கு கூட்டணி கட்சி எச்சரிக்கை!
பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தலனா! 2026 தேர்தலில்! திமுகவுக்கு கூட்டணி கட்சி எச்சரிக்கை!

திமுக தேர்தல் வாக்குறுதியாக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவோம் என அறிவித்தனர். இதை நம்பி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் திமுகவுக்கு வாக்களித்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

25
பழைய ஓய்வூதிய திட்டம்

மேலும் எதிர்கட்சித் தலைவராக இருந்தால் மட்டுமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்துப் பேசுவார் என்றால் 2026-இல் அதை அவருக்கு பரிசளிக்க தயாராக இருக்கிறோம் என தெரிவித்திருந்தனர். இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தாவிட்டால் 2026 தேர்தலில் அரசு ஊழியர்கள் மாற்று முடிவை எடுப்பார்கள் என திமுக கூட்டணி கட்சி தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இதையும் படிங்க: இப்படி நம்ப வச்சு ஏமாத்துட்டீங்களே முதல்வரே! ஒட்டுமொத்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பேரிடி!

35
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்

புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்: வேங்கைவயல் விவகாரத்தில் விசிக மட்டுமின்றி, நாங்களும் அதிருப்தியில் இருக்கிறோம். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். திருப்பரங்குன்றம் விவகாரத்தைப் பொருத்தவரை, ஹெச்.ராஜா உள்ளிட்ட இந்து அமைப்பினர் பேசியது கண்டனத்துக்குரியது. மக்களின் வழிபாட்டு உணர்வை, அரசியல் லாபத்துக்காக பாஜக பயன்படுத்தி வருகிறது. 

45
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்

மேலும் சட்டப்பேரவைத் தேர்தலின்போது பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாததால், திமுக அரசு மீது ஆசிரியர்கள், அரசு ஊழிர்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே, வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் இந்தக் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால், வரும் தேர்தலில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மாற்று முடிவை எடுப்பார்கள் என தெரிவித்துள்ளார். 

55
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

குறிப்பிட்ட பிரச்சினையில் எதிர்ப்பு தெரிவிப்பதாலேயே கூட்டணி முறிந்துவிடும் என்ற முடிவுக்கு வரத் தேவையில்லை. ஒவ்வொரு பிரச்சினையிலும் எங்களுக்கென தனி நிலைப்பாடு இருக்கிறது. கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக, எல்லா பிரச்சினையிலும் ஒத்துப்போக வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories