நிலத்திற்கு பட்டா கிடைக்கவில்லையா.? பொது மக்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு

Published : Feb 11, 2025, 10:35 AM IST

தமிழகத்தில் புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் 86,000 பேருக்கு பட்டா வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் 29,187 பேருக்கும், மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிப் பகுதிகளில் 57,084 பேருக்கும் பட்டா வழங்கப்படும்.

PREV
14
நிலத்திற்கு பட்டா கிடைக்கவில்லையா.? பொது மக்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு
நிலத்திற்கு பட்டா கிடைக்கவில்லையா.? பொது மக்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு

ஏழை, எளிய மக்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் புறம்போக்கு மற்றும் அரசு நிலங்களை ஆக்கிரமித்து தலைமுறை, தலைமுறையாக பல லட்சம் பேர் பல வருடங்களாக வசித்து வருகிறார்கள். அந்த வகையில் அந்த இடங்களுக்கு உரிய வகையில் பட்டா கிடைக்காமல் தவித்து வருகிறார்கள், எனவே நீண்ட காலமாக குடியிருப்போர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை மனு கொடுத்து போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். 
 

24
ஏழை எளிய மக்களுக்கு பட்டா

சென்னையை சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் ‘பெல்ட் ஏரியா’என்று கூறப்படும் 32 கி.மீ. பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து நீண்ட காலமாக குடியிருப்பவர்கள் பட்டா பெற முடியாமல் சிரமப்படுகின்றனர். இதே போல மதுரை, திருநெல்வேலி போன்ற மாநகராட்சிகளிலும் இதேபோல பிரச்சினை நீடிக்கிறது. இதனையடுத்து ஏழை எளிய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையையடுத்து பட்டா வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. தமிழக அமைச்சரவை கூட்டத்தில்  86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 
 

34
86ஆயிரம் பேருக்கு பட்டா

இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்,  ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.  சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களின் “பெல்ட் ஏரியாக்களில்" ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 29,187 பேர், மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகள் நகராட்சிகள் மாவட்டத் தலைநகரப் பகுதிகளில் 57,084 பேர் என மொத்தம் 86 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்குப் பட்டா வழங்க  அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளோம் என கூறியுள்ளார். 

44
மகிழ்ச்சியில் மக்கள்

 மேலும் 6 மாதங்களில் இதனைச் செய்துமுடிக்க இரண்டு குழுக்களையும் அமைக்கவுள்ளோம்
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 12,29,372 பட்டாக்கள் வழங்கப் பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்  தமிழக அரசின் இந்த முடிவால் பல ஆண்டு காலமாக காத்திருந்த ஏழை எளிய மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

Read more Photos on
click me!

Recommended Stories