எங்கள் தலைவர் சொன்னால் விஜய்யை எதிர்த்து போட்டியிட தயார்! பரபரப்பைக் கிளப்பிய அதிமுக நடிகை!

Published : Mar 10, 2025, 12:16 PM ISTUpdated : Mar 10, 2025, 12:23 PM IST

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய்-யை எதிர்த்து போட்டியிட தயார் என அதிமுகவை சேர்ந்த நடிகை கூறியுள்ளார். 

PREV
15
எங்கள் தலைவர் சொன்னால் விஜய்யை எதிர்த்து போட்டியிட தயார்! பரபரப்பைக் கிளப்பிய அதிமுக நடிகை!
Edappadi Palanisamy

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்  2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற காட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார். 

25
AIADMK

குறிப்பாக புதிய கட்சியை தொடங்கி உள்ள தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய்யுடன் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட விரும்புகிறது. இதற்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் திரைமறைவில் நடந்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில், அதிமுக தலைமை அனுமதித்தால், தவெக தலைவர் விஜய்யை எதிர்த்து போட்டியிட தயார் என நடிகை காயத்ரி ரகுராம் கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: சீனியர், ஜூனியர் பார்க்க மாட்டேன்! கட்சியில் இருந்து நீக்கி விடுவேன்! ராஜேந்திர பாலாஜிக்கு இபிஎஸ் எச்சரிக்கை?

35
Gayathri Raghuram

இந்நிலையில் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக நிர்வாகி காயத்ரி ரகுராம்: பாஜக தலைவர் பதவி பறிபோய் விடுமோ என்ற பயத்தில் அதிமுக பாஜகவுடனான கூட்டணி தவம் கிடப்பதாக வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுகிறார்.  பாஜக தலைவர்களுக்கு தமிழ்நாட்டு மண்ணின் வலியும் தெரியாது. தமிழ்நாட்டின் உணர்வும் புரியாது. 2026 சட்டமன்ற தேர்தலில், அதிமுக தலைமை அனுமதித்தால், தவெக தலைவர் விஜய்யை எதிர்த்து போட்டியிட தயார் என கூறியுள்ளார். 

45
MK Stalin

தொகுதி மறுவரையறை என்பது பாஜகவின் சூழ்ச்சி தந்திரம். தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து எதை கேட்டாலும் அதை திசை திருப்புவதில் தான் திமுக ஆட்சி இருக்கிறது. தன்னுடைய மகனை எப்படி வளர்க்க வேண்டும் என ஆசைப்படுகிறார்களே தவிர இங்கிருக்கக் கூடிய மக்களுடைய பிள்ளைகளை வஞ்சிக்கிறார்கள்.

இதையும் படிங்க: டாஸ்மாக்கில் 1 லட்சம் கோடி ஊழல்! அமலாக்கத்துறை சோதனைக்கு இவர் தான் காரணமா?

55
Jayalalitha

இதே ஜெயலலிதா இருக்கும்போது இதுபோன்ற குற்றச்செயல்கள் நடந்தது என்றால் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு போலீஸ் அதிகாரியோ அல்லது மற்ற துறை சார்ந்த அரசு அதிகாரிகளோ தவறுகள் செய்தால் உடனடியாக அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். என்னைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு பூஜ்ஜியம். திமுக ஆட்சியும் பூஜ்ஜியம். ஆனால் மாற்றி மாற்றி அப்பாவும் மகனும் அவர்களுக்குள்ளாகவே 100 சதவீதம் மதிப்பெண் கொடுத்துக் கொள்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories