செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த திருநாராயணபுரம், அன்னை சத்யா தெருவை சேர்ந்தவர் சங்கர் (50). டெய்லர். இவரது மனைவி செல்வராணி (38). இவர் தனியார் நிறுவனத்தில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வந்தார். அப்போது, குமரேசன் என்பவருடன் வழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில் திடீரென குமரேசனுடன் பேசுவதை செல்வராணி தவிர்த்து வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் வேறொருடன் தொடர்பில் இருந்து வந்ததால் குமரேசன் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.