Published : Mar 10, 2025, 08:16 AM ISTUpdated : Mar 10, 2025, 08:26 AM IST
சட்டமன்ற தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்ட அதிமுக மாவட்ட பொறுப்பாளர்களை எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார். பூத் கமிட்டியில் குளறுபடி இருந்தால் நடவடிக்கை எடுப்பேன் என்றும், உட்கட்சி பூசல்கள் கூடாது என்றும் அறிவுறுத்தினார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். அதேபோல் சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமையும் என கூறிவருகிறார்.
25
Edappadi Palanisamy
இந்நிலையில் வருகிற சட்டமன்ற தேர்தல் பணிகளுக்கான அதிமுக தலைமையால் 82 மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்கள் கடத்தி சில நாட்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டனர். இவர்களுடன் காணொலி காட்சி மூலமாக எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் இருந்து கூட்டத்தை நடத்தினார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி எப்போது இல்லாத அளவுக்கு நிர்வாகிகளை லெப்ட் ரைட் வாங்கினார். மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, பூத் கமிட்டி ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும்.
35
Edappadi Palanisamy warning
அனைத்து மாவட்டங்களுக்கும் வந்து ஆய்வு செய்வேன். பூத் கமிட்டியில் குழப்பங்கள் குளறுபடிகள் இருந்தால் சீனியர், ஜூனியர் என்றோ பார்க்க மாட்டேன் நடவடிக்கை எடுப்பேன் என எச்சரித்தார். அம்மா இருந்தபோது நமது கட்சியை ராணுவ கட்டுப்பாட்டோடு வைத்திருந்தார். ஆனால், இப்போது அந்த கட்டுப்பாட்டில் தளர்வு ஏற்பட்டிருக்கிறது. உட்கட்சியில் கோஷ்டி பூசல்கள் அதிகரித்து கொண்டு வருகின்றன. உட்கட்சி விவகாரம் குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது. தனிப்பட்ட பிரச்சனைகளை மனதில் வைத்து தேர்தல் பணிகளில் சுனக்கம் காட்டாமல் ஒற்றுமையாக தேர்தல் பணிகள் செய்ய வேண்டும். இனி இதுபோன்ற தவறு செய்தால் கட்சியில் இருந்து நீக்கப்படுவர் என மறைமுகமாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் விருதுநகரில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில், பாண்டியராஜனுக்கு சால்வை அணிவிக்க வந்த நிர்வாகியை, மேடையிலேயே ராஜேந்திர பாலாஜி கன்னத்தில் அறைந்தார். அதுமட்டமல்லாமல் ராஜேந்திர பாலாஜி அதிமுகவில் நான் ஒரு குறுநில மன்னர்தான். நான் வெற்றி வந்தாலும் தோல்வி வந்தாலும் அதிமுக இயக்கத்தில்தான் இருப்பேன். கட்சியை காட்டிக்கொடுத்தவர் மாஃபா பாண்டியராஜன்.
55
ma foi pandiarajan
நீ என்கூட போட்டி போடுகிறாயா?. இயக்கத்தை காட்டிக்கொடுத்துவிட்டு ஓடியவன் நீ. ஒரு வழக்கு வந்தால் நீ கட்சியை விட்டு ஓடிவிடுவாய். என் மீது எத்தனை எத்தனை வழக்கு போட்டு மிரட்டினாலும் எடப்பாடியார் பக்கம்தான் நிற்பேன் என பேசியிருந்தார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் மஃபா பாண்டியராஜன் புகார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.